ஜோதி கிருஷ்ணா இயக்கி நடிக்கும் படம் 'ஊலலலா. அவருக்கு ஜோடியாக புதுமுகம் ப்ரீத்தி பண்டாரி நடிக்கிறார். இவர் தவிர படத்தில் 25 மாடல் பெண்க...
ஜோதி கிருஷ்ணா இயக்கி நடிக்கும் படம் 'ஊலலலா. அவருக்கு ஜோடியாக புதுமுகம் ப்ரீத்தி பண்டாரி நடிக்கிறார். இவர் தவிர படத்தில் 25 மாடல் பெண்கள் நடித்திருக்கிறாகள். ஷூட்டிங்கின்போது அவர்கள் டார்ச்சர் தந்ததாக ஜோதி கிருஷ்ணா தெரிவித்தார்.இது பற்றி ஜோதி கிருஷ்ணா கூறியதாவது:ஊர்வசி, லதா, லலிதா, லாவண்யா என்ற பெண்களின் முதல் எழுத்தை கொண்டுதான் 'ஊலலலா என தலைப்பை வைத்திருக்கிறேன். கதைப்படி ஹீரோவான நான், எந்த பெண்ணை பார்த்தாலும் உடனே சைட் அடிப்பேன். அதனால் மும்பை, சென்னையை சேர்ந்த 25 மாடல்களை தேர்வு செய்து நடிக்க வைத்தேன். அவர்களை வைத்து படம் எடுப்பதற்குள் மிகவும் சிரமப்பட்டேன்.
அந்த நடிகைக்கு மட்டும் நல்ல டிரஸ் கொடுக்குறீங்க,எனக்கு தனி மேக்அப் மேன் வேணும், கேரவன் வேணும், அவருக்கு அதிகமான சீன், எனக்கு குறைவான சீன் வச்சிருக்கீங்க என நிறைய பிரச்னை பண்ணினார்கள். அதையெல்லாம் சமாளித்து படம் எடுக்க வேண்டியது இருந்தது. ஷூட்டிங்கிற்கு நேரத்துக்கு வருவதும் இல்லை. ஒருவரை பற்றி ஒருவர் ஏதேனும் குறை சொல்லிக் கொண்டே இருந்தார்கள். என்னை பற்றியும் மற்றவர்களிடம் குறை சொன்னார்கள். ஹீரோயின் ப்ரீத்தி பண்டாரி பெரிய அழகா? என்னை பார்த்தால் அழகாக தெரியவில்லையா, அவரை நீக்கி விட்டு என்னை ஹீரோயினாக போடுங்கள் என்று இரண்டு மும்பை மாடல்கள் கடைசிவரை டார்ச்சர் கொடுத்தபடி இருந்தார்கள். சில பெண்களிடம் நான் அறை வாங்குவது போன்ற காட்சி எடுத்தபோது, என் மீதுள்ள கோபத்தில் நிஜமாகவே சிலர் அடித்தார்கள். அது தெரிந்தும் கூட காட்சி நன்றாக வந்தால் போதும் என பொறுத்துக் கொண்டேன். ஒரு வழியாக படத்தை முடித்து விட்டேன். இனி கண்டிப்பாக பல நடிகைகளை வைத்து படம் இயக்க மாட்டேன்.இவ்வாறு ஜோதி கிருஷ்ணா கூறினார்.
Comments
Post a Comment