தம்பி மனைவியிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை :நடிகை ஆம்னி கைது ஆகிறா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக நடிகை ஆம்னி மீது புகார் செய்யப்பட்டு உள்ளது. அவருடைய தம்பி கைது செய்யப்பட்டார். தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஆம்னி. இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதன் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டார். இவருடைய தம்பி சீனிவாஸ் (35). இவருக்கும், நெல்லூரை சேர்ந்த லீலாவதி (31) என்ற பெண்ணுக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு பிரீத்தி (11) என்ற மகள் உள்ளார். சென்னையில் வசித்து வருகின்றனர். திருமணத்தின் போது லீலாவதியின் பெற்றோர் ரூ.7 லட்சம் ரொக்கம், 45 சவரன் நகை, 10 கிலோ வெள்ளி பொருட்கள் கொடுத்ததாக கூறப்படுகிறது. சில ஆண்டுகளாக குடிப் பழக்கத்துக்கு அடிமையான சீனிவாஸ், லீலாவதியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் வேதனை அடைந்த லீலாவதி, நெல்லூர் போலீசில் நேற்று புகார் செய்தார். அதில், 'எனது கணவர் தினமும் குடித்து விட்டு வந்து அடித்து துன்புறுத்துகிறார். எனது தாய் வீட்டுக்கு சென்று வரதட்சணை வாங்கி வரும்படி சித்ரவதை செய்கிறார். இதற்கு அவருடைய தாய் சரோஜாவும், நாத்தனார் நடிகை ஆம்னியும் உடந்தையாக உள்ளனர். எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால், சென்னையில் இருந்து தப்பி தாய் வீட்டுக்கு வந்து விட்டேன். இது குறித்து சென்னை போலீசிலும் புகார் செய்துள்ளேன்' என்று கூறியுள்ளார். இதையடுத்து, ஆம்னி உட்பட 3 பேர் மீதும் நெல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சீனிவாசை நேற்று கைது செய்தனர். ஆம்னி, சரோஜாவை விரைவில் கைது செய்வோம் என போலீசார் கூறினர்.

Comments

Most Recent