கனகவேல் காக்க படத்தில் கரண் ஜோடியாக நடித்தவர் ஹரிப்பிரியா. இப்போது வல்லக்கோட்டையில் அர்ஜுனுடன் நடித்து வருகிறார். இவர் தெலுங்கு, கன்னட படங...
கனகவேல் காக்க படத்தில் கரண் ஜோடியாக நடித்தவர் ஹரிப்பிரியா. இப்போது வல்லக்கோட்டையில் அர்ஜுனுடன் நடித்து வருகிறார். இவர் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடிக்கிறார். கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் மகனை இவர் காதலிப்பதாக கன்னட சினிமா உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ஹரிப்பிரியாவுக்கு எடியூரப்பாவின் மகன் நிலத்தை பரிசளித்ததாகவும் தகவல்கள் பரவியுள்ளன. இது பற்றி ஹரிப்பிரியா கூறியதாவது:
கன்னட சினிமாவுக்கு வந்த ஆரம்பத்தில், நான் அதிக சம்பளம் கேட்பதாக சொன்னார்கள். பின் கால்ஷீட் பிரச்னை செய்வதாகவும் ஷூட்டிங்கிற்கு நேரத்துக்கு வருவதில்லை என்றும் புரளி கிளப்பினார்கள். இப்போது கன்னடத்தில் நான் வளர்ந்து வருகிறேன். இதை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் பெரிய புரளியை கிளப்பலாம் என கர்நாடக முதல்வர் குடும்பத்தோடு இணைத்து பேசுகிறார்கள். முதல்வருக்கு மகன் இருப்பது கூட எனக்கு தெரியாது. அப்படி இருக்கும்போது, இந்த தகவல் எல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு எதிராக வதந்தி பரப்புகிறவர்கள் யார் என தெரிய வேண்டும். தெரிந்துவிட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு ஹரிப்பிரியா கூறினார்.

Comments
Post a Comment