நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... மச்சான் பட பூஞ்சா நடிகைக்கு தமிழ்ல வாய்ப்புகளே இல்லை. அதனால கன்னடமே கதின்னு கிடக்கிறார...
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
மச்சான் பட பூஞ்சா நடிகைக்கு தமிழ்ல வாய்ப்புகளே இல்லை. அதனால கன்னடமே கதின்னு கிடக்கிறாராம்... கிடக்கிறாராம்... கன்னட ஹீரோக்களோடு நட்பா இருக்கிறதால அங்கே ஒரே நேரத்துல மூணு படங்கள்ல நடிக்கிறாராம்... நடிக்கிறாராம்...
துலானி நடிகை, தன்னுடைய தங்கையோடு தெலுங்கு, கன்னட படங்கள்ல நடிச்சாரு. எதுவுமே ஓடல. சகோதரிகளுக்கு வாய்ப்பும் வரல... வாய்ப்பும் வரல... இதனால வெளிநாட்டு கலை விழாக்கள்ல நடிகைகள் கவனம் செலுத்துறாங்களாம். திரும்ப ஒரு பாட்டுக்கு ஆடவும் ரெடின்னு சில தயாரிப்புகளுக்கு துலானி தூது அனுப்பியிருக்கிறாராம்... அனுப்பியிருக்கிறாராம்...
முதல் இந்தி படமே ஏமாற்றம் தந்ததால மூணுஷா நடிகை அப்செட்ல இருக்கிறாராம்... இருக்கிறாராம்... நம்பியிருந்த படம் இப்படி ஆயிடுச்சேன்னு தன்னோட மம்மியை கட்டிப்பிடிச்சி அழுதாராம்... நடிகை அழுதாராம்... அடுத்த இந்தி படங்கள்ல நடிக்க குமார் நடிகர் போட்ட ஒப்பந்தம் ரத்து ஆகுமோன்னு கலக்கத்துலேயும் இருக்கிறாராம்... இருக்கிறாராம்....
Comments
Post a Comment