சம்பளம் அதிகம் கேட்டதால் தெலுங்கு படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத். தமிழில் பிசியாக இருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத், தெலுங்...
சம்பளம் அதிகம் கேட்டதால் தெலுங்கு படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத். தமிழில் பிசியாக இருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத், தெலுங்கில் மகேஷ்பாபு, சமந்தா ஜோடி சேரும் படத்துக்கு இசைமயைக்க ஒப்பந்தமானார். இப்படத்தை சீனு வைட்லா இயக்குகிறார். இப்போது திடீரென படத்திலிருந்து தேவியை நீக்கி, தமனை இசையமைப்பாளராக தேர்வு செய்துள்ளனர்.இந்த படத்துக்கு இசையமைக்க அதிக நாட்கள் தேவை என தேவி ஸ்ரீ பிரசாத் கேட்டார்.
அத்துடன் சம்பளமும் அதிகம் கேட்டார். அதனால் அவர் வேண்டாம் என மகேஷ்பாபு கூறிவிட்டார். இந்த படத்தை விரைவாக முடிக்கவும் மகேஷ்பாபு திட்டமிட்டுள்ளார். அதனால் இசையமைக்க அதிக நாட்கள் எடுத்துக்கொள்வதையும் அவர் விரும்பவில்லை. இயக்குனர் சீனு வைட்லாவின் ஆஸ்தான இசையமைப்பாளர் தேவி. ஆனாலும் ஹீரோ சொல்லிவிட்டதால் அவரை சீனு மாற்றி இருக்கிறார் என பட வட்டாரங்கள் தெரிவித்தன.
Comments
Post a Comment