கலைத்தாய் நிறுவனம் சார்பில் பி.சி.பாலு தயாரித்துள்ள படம், 'ஜெயமுண்டு பயமில்லை'. தமிழ்நாட்டில் சுனாமியால் ...
கலைத்தாய் நிறுவனம் சார்பில் பி.சி.பாலு தயாரித்துள்ள படம், 'ஜெயமுண்டு பயமில்லை'. தமிழ்நாட்டில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை பிரச்னையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படம் பற்றி இயக்குனர் செந்தமிழ் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஏற்பட்ட சுனாமி, இந்த தலைமுறை சந்தித்த பேரழிவு. அதற்கு பல்வேறு நாடுகள் பல ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கியது. ஆனால், அந்தப் பணம் மக்களை சென்று சேராமல் வாழ்க்கையை இழந்து தவிக்கிறார்கள். அவர்களால் படிக்க வைக்கப்படும் இளைஞன், அவர்கள் எப்படி மாற்றப்படுகிறார்கள் என்பதை கண்டுபிடித்து போராடும் கதை. இதில் காதலும் உண்டு, சுனாமியால் இன்பத்தை தொலைத்த மீனவ மக்களின் வாழ்க்கையும் உண்டு. ஏற்கெனவே காவிரி பிரச்னைக்கான 'தம்பியுடையான்' படத்தில் நடித்த ஆதித்யா அன்பு இதிலும் ஹீரோ. 'வால்மீகி'யில் நடித்த தேவிகா, கன்னட நடிகை பிரியங்கா ஆகியோர் ஹீரோயினாக நடிக்கிறார்கள். இந்தப் படம் வெளிவந்த பிறகு சுனாமியால் பாதித்த மீனவர்களின் உண்மையான வாழ்க்கை நிலவரம் உலகத்துக்கு தெரிய வரும். இவ்வாறு செந்தமிழ் கூறினார்.
Comments
Post a Comment