டிவியில் மட்டுமே ஒளிபரப்பாகும் அனுயாவின் குத்தாட்டம்

http://thatstamil.oneindia.in/img/2010/07/23-anuya200.jpg
நஞ்சுபுரம் படத்தில் நடிகை அனுயா ஆடியுள்ள குத்தாட்டம் டிவி விளம்பரங்களில் மட்டுமே ஒளிபரப்பப்படும். படத்தில் இருக்காதாம்.

சிவா மனசுல சக்தி என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்த மும்பை வரவான அனுயா, அடுத்த படமான மதுரை சம்பவத்தில் கலக்கலாக நடித்து தனது பலம் கவர்ச்சியில்தான் என்பதை வெளிப்படுத்தினார்.

அவரது கவர்ச்சித் திறனைப் பார்த்த கோலிவுட்டினர் இப்போது கவர்ச்சிகரமான வேடங்களுக்காக அவரை அணுகி வருகின்றனராம். அதேசமயம், சைடில் ஒரு குத்துப் பாட்டுக்கு நஞ்சுபுரம் படத்திற்கு ஆடினார் அனுயா. இதைப் பார்த்து, எங்க படத்திலும் ஒரு குத்து இருக்கே என்று வந்து அணுகியவண்ணம் உள்ளனராம். ஆனால் அத்தனையையும் நிராகரித்து விட்டாராம் அனுயா.

ஏன் என்று கேட்டால், நட்புக்காகத்தான் நஞ்சுபுரத்தில் ஆடினேன். மற்றபடி அது எனது இலக்கல்ல என்கிறார். மேலும் இந்த பாடல் படத்தில் வராதாம். டிவி விளம்பரங்களுக்கு மட்டுமே வருமாம். அதாவது பாப் பாடல் போல இதைப் படமாக்கியிருக்கிறார்களாம். படத்தின் ஹீரோவும், இசையமைப்பாளருமான ராகவ், அனுயாவின் தோழராம். அவர் கேட்டுக் கொண்டதால் ஆடிக் கொடுத்தாராம். மற்றபடி இது எனது முழு நேரத் தொழிலாகாது, அதேசமயம், எப்போதாவது ஆடுவேன் என்கிறார் அனுயா.

அனுயா இப்போது சுந்தர்.சியுடன் நகரம் மறுபக்கம் என்ற படத்தில் ஜோடி போட்டு நடித்து வருகிறாராம்.

Comments

Most Recent