கிராமத்து கதைகளை மட்டுமே இயக்கி வந்தவர் கஸ்தூரிராஜா. 'துள்ளுவதோ இளமைக்கு பின் நகரத்து கதை படங்களை இயக்கி வருகிறார். கவர்ச்சி காட்சிகளு...
கிராமத்து கதைகளை மட்டுமே இயக்கி வந்தவர் கஸ்தூரிராஜா. 'துள்ளுவதோ இளமைக்கு பின் நகரத்து கதை படங்களை இயக்கி வருகிறார். கவர்ச்சி காட்சிகளுக்கும் முக்கியத்துவம் தருகிறார். இந்நிலையில் தனது பாணியை மீண்டும் மாற்றி, 'அசுரகுலம் என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் நான்கைந்து புதுமுக இளைஞர்கள் நடிக்கிறார்கள். இது ஆக்ஷன் அம்சங்கள் நிறைந்த கதை. இப்படம் 60 சதவீதம் முடிந்துவிட்டது. இந்நிலையில் அடுத்த படத்துக்கான கதையை எழுதி வருகிறார். இப்படத்தை அவரே இயக்க உள்ளார். இதில் ஹீரோயினாக நடிக்க சோனியா அகர்வாலிடம் பேசியுள்ளார் கஸ்தூரி ராஜா. மகன் செல்வராகவனுடன் விவாகரத்துக்கு பின், முன்னாள் மருமகளை அவர் தன் படத்தில் இயக்குவது பற்றி கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.இது பற்றி கஸ்தூரிராஜாவிடம் கேட்டபோது, 'சோனியா அகர்வாலிடம் என் படத்தில் நடிக்க கேட்டது உண்மைதான். அவர் மறுப்பு ஏதும் சொல்லவில்லை. செல்வராகவனுடன் விவாகரத்துக்கு பின்பே சோனியாவிடம் நடிக்க கேட்டேன். அந்த பேச்சு அதோடு நிற்கிறது. மீண்டும் இருவரும் பேசவில்லை. அந்த கதாபாத்திரத்துக்கு அவர்தான் பொருத்தமானவர். சோனியா கால்ஷீட் கொடுத்ததும் அவரை வைத்து இயக்குவேன் என்றார்.
Comments
Post a Comment