நான் கடவுள் படத்தில் அகோரியாக நடித்திருந்தார் ஆர்யா. ஹீரோ இப்படி நடிப்பது சினிமாவில் புதிதல்ல. இப்போது அதே போன்ற அகோரி வேடத்தில் நடிக்கிறா...
நான் கடவுள் படத்தில் அகோரியாக நடித்திருந்தார் ஆர்யா. ஹீரோ இப்படி நடிப்பது சினிமாவில் புதிதல்ல. இப்போது அதே போன்ற அகோரி வேடத்தில் நடிக்கிறார் ஹீரோயின் பூஜா காந்தி. கொக்கி, தலையெழுத்து, திருவண்ணாமலை படங்களில் நடித்தவர் பூஜா காந்தி. கன்னடத்தில் பிசி நடிகையாக உள்ளார். இவர் நடிக்கும் கன்னட படம் ராணி மகாராணி. இதில்தான் அகோரி வேடம் ஏற்கிறார் பூஜா. கதைப்படி சுடுகாடு பகுதிகளில் சுற்றித் திரிவார¢. நர மாமிசம் சாப்பிடும் காட்சியிலும் நடிக்கிறாராம் பூஜா. இதற்காக நிஜ அகோரிகள் சிலரை பார்க்க காசிக்கு போக உள்ளாராம் பூஜா. அவர்களின் நடை, உடை, பழக்க வழக்கங்களை நேரில் பார்க்க போகிறாராம்.
இந்த படத்தில் ஹீரோயினுக்கு அகோரி வேடம் என இயக்குனர் சொன்னதும் நடுங்கிப் போனேன். அதற்காக நிறைய ஹோம் ஒர்க் செய்ய வேண்டும் என்றும் இயக்குனர் கூறினார். இது போன்ற வேடத்துக்காகவே காத்திருந்தேன். இதில் எனது நடிப்பு திறமையை முழுமையாக நிரூபிக்க முடியும். விருதுக்காக இந்த வேடம் ஏற்பதாக சிலர் பேசுவது பற்றி எனக்கு கவலை இல்லை. என்னை பொறுத்தவரை இது எனக்கு சவாலான வேடம் என்றார் பூஜா.
Comments
Post a Comment