பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஒபராய் திருமணம் அக்டோபர் 29ம்தேதி நடைபெறவுள்ளது. 2002ம் ஆண்டு டைரக்டர் ராம்கோபால் வர்மாவால் கம்பெனி என்ற படத...
பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஒபராய் திருமணம் அக்டோபர் 29ம்தேதி நடைபெறவுள்ளது. 2002ம் ஆண்டு டைரக்டர் ராம்கோபால் வர்மாவால் கம்பெனி என்ற படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் விவேக் ஓபராய். அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்த ஓபராய்க்கு இப்போது 34 வயது ஆகிறது. செப்டம்பர் 3ம்தேதி 35 வயது பிறக்கவுள்ள நிலையில் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இதற்காக கடந்த சில மாதங்களாகவே தங்கள் மகனுக்கு பெண் பார்க்கும் படலத்தில் தீவிரமாக இறங்கியிருந்தனர்.
இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த பிரியங்கா என்ற பெண் ஓபராயின் பெற்றோருக்கு பிடித்து விட்டது. இதையடுத்து மணமகள் வீட்டில் பேசி திருமணம் முடிவு செய்துள்ளனர். மணமகள் பிரியங்கா புகழ் பெற்ற நடனக்கலைஞர் ஆவார். 28 வயதாகும் இவர், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் மந்திரியுமான ஜீவராஜ் ஆல்வா - நந்தினி ஆல்வா தம்பதியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டனில் தொழில் நிர்வாகம் குறித்த படிப்பில் பட்டம் பெற்றிருக்கும் பிரியங்காவுக்கும் - நடிகர் விவேக் ஒபராய்க்கும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 29ம்தேதி திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment