ஜெயம் ரவியின் பூலோகம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்துக்கு பூலோகம் என்று பெயரிடப்பட்டுள்ளது. 'இச்', 'ஆதி பகவன்' படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இதற்கிடையே அவர் நடிக்கும் புதிய படம் 'பூலோகம்'. இதை இயக்குனர் ஜனநாதனின் இணை இயக்குனர் என்.கல்யாண கிருஷ்ணன் கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார். இயற்கை, ஈ, பேராண்மை படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இவர். ஜெயம் ரவி ஜோடியாக, முன்னணி நடிகை ஒருவர் நடிக்க இருக்கிறார். ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் பற்றி, கல்யாண கிருஷ்ணன் கூறும்போது, 'இது பாக்ஸிங் பற்றிய படம். இந்த கதைக்காக கடந்த 5 வருடமாக தமிழக மற்றும் சர்வதேச அளவிலான பாக்ஸிங் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஆராய்ச்சி செய்துள்ளேன். வழக்கமான சினிமாவாக இது இருக்காது. படத்துக்காக, தனது உடலை இரண்டு மடங்காக உயர்த்த இருக்கிறார் ஜெயம் ரவி. விரைவில் ஷூட்டிங்கை தொடங்க இருக்கிறோம்' என்றார்.

Comments

Most Recent