நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... எது செஞ்சாலும் பிளான் பண்ணி பண்றவரு வர்மாவான இந்தி இயக்குனர். பிரகாச நடிகரை வச்சு அவர்...
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
எது செஞ்சாலும் பிளான் பண்ணி பண்றவரு வர்மாவான இந்தி இயக்குனர். பிரகாச நடிகரை வச்சு அவர் தமிழ், இந்தியில இயக்கின படம் லேட்டாகுதாம்... லேட்டாகுதாம்... இந்த படத்துக்கு அவர் போட்ட பிளான் எல்லாமே தலைகீழா மாறிப்போச்சாம்... மாறிப்போச்சாம்... பட வேலைகள் முடியாம, ரிலீஸ் தேதி தள்ளிப்போகுதாம்... தள்ளிப்போகுதாம்...
மில்க் இயக்குனர் படத்துல மதுவான நடிகை நடிக்கிறாரு. இதுக்கு முன்னாடி சில படங்கள்ல நடிச்சிருந்தாலும், ஸ்பாட¢ல நடிகை திணறிப்போறாராம்... திணறிப்போறாராம்...
ஒரு ஷாட்டுக்கு பல டேக் வாங்குறாராம்... வாங்குறாராம்... கடுப்பான இயக்குனர், நடிகையை காச் மூச்சுன்னு சத்தம் போடுறாராம்... சத்தம் போடுறாராம்...
நமீ நடிகையோட ஆங்கில படத்தை வாங்க இதுவரைக்கும் ஆளே கிடைக்கலையாம்... கிடைக்கலையாம்... அதனால அதை தமிழ்ல டப் பண்ணி, கிளு கிளுப்பு பட ரேஞ்சுக்கு ரிலீஸ் பண்ணிடலாம்னு தயாரிப்பு முடிவு பண்ணியிருக்கிறாராம். அதுக்கான முயற்சிலேயும் இறங்கியிருக்கிறாராம்... இறங்கியிருக்கிறாராம்...
Comments
Post a Comment