நடிகர் விஜய் நடித்த காவல்காரன் படத்தின் தலைப்புக்கு சத்ய மூவீஸ் எதிர்ப்பு தெரிவித்ததால், இப்போது காவல்...
நடிகர் விஜய் நடித்த காவல்காரன் படத்தின் தலைப்புக்கு சத்ய மூவீஸ் எதிர்ப்பு தெரிவித்ததால், இப்போது காவல் காதல் என்று பெயர் வைத்திருக்கின்றனர். தொடர்ந்து சிம்பு நடித்து வரும் வானம் படத்திற்கும் பிரச்சனை எழுந்துள்ளது. தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் கில்டு அமைப்பில் வினோதன் என்பவர் தனது கதை தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்திற்கு வானம் என்று தலைப்பை பதிவு செய்திருக்கிறார். இது பற்றி தெரிந்து கொள்ளாமல் சிம்பு நடிக்கும் படம் ஒன்றிற்கு வானம் என்ற தலைப்பை விளம்பரம் செய்து உள்ளனர். ஒரு படம் தயாரிக்கும் நிறுவனம். பிலிம் சேம்பர் அல்லது தயாரிப்பாளர் சங்கம் அல்லது கில்டு ஆகிய இடங்களில் பட நிறுவனத்தை பதிவு செய்ய வேண்டும். அந்த நிறுவனத்தின் பெயரில்தான் படத் தலைப்புகளை பதிவு செய்ய வேண்டும். இதில் சிம்பு நடிக்கும் பட நிறுவனம் இந்த மூன்று சங்ககளிலும் தலைப்பு பதிவு செய்யவில்லை என்பது, வானம் படத்தின் தயாரிப்பாளர் வினோதனின் குற்றச்சாட்டு.
Comments
Post a Comment