SRK waxed again in NewYork | ஷாரூக்கின் மெழுகு சிலை நியூயார்க்கில் திறப்பு

The-wax-figure-of-Shah-Rukh-Khan-at-he-New-York-Madame-Tussauds.jpg

[ pic: The wax figure of Shah Rukh Khan at New York Madame Tussauds ]

Bollywood superstar Shah Rukh Khan has been made into a wax statue at the New York Madame Tussauds.

In the wax, he is dressed in a sleek black suit and white shirt. “The King of Bollywood”, SRK already has a statue at Tussauds in London and in Madame Tussauds Hollywood.

நியூயார்க்கில் பாலிவுட் நட்சத்திரம் ஷாரூக்கானின் மெழுகு சிலை திறக்கப்பட்டது. மை நேம் இஸ் கான் டி.வி.டி. வெளியிட்டதை தொடர்ந்து ஷாரூக்கை பெருமை படுத்தும் விதமாக இந்த சிலை நிறுவப்பட்டதாக, மேடம் டிஸாட்ஸ் நிறுவனத்தின் மார்கெட்டிங் இயக்குனர் தெரிவித்தார். இங்கு பாலிவுட் என தனிப்பகுதி பிரிக்கப்பட்டுள்ளது. அதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனை தொடர்ந்து ஷாரூக் மெழுகு சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை ஓம் சாந்தி ஓம் படத்தில் ஷாரூக் ஆடுவதைபோல் உள்ளது. ஏற்கனவே லாஸ்ஏஞ்சல்ஸ்சில் ஷாரூக் மெழுகுசிலை நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நியூஸ் வீக் என்ற பத்திரிக்கை நடத்திய 2008ம் ஆண்டில் உலகில் மிகவும் சக்திவாய்ந்த 50 நபர்கள் பட்டியலில் ஷாரூக் இடம்பெற்றிருந்தார். இதுமட்டும் இல்லாது, அமெரிக்க பங்கு சந்தையான நாஸ்டாக்கில் மணியடித்து பங்கு வர்த்தகத்தை துவக்கி வைத்த முதல் பாலிவுட் நடிகர் என்ற பெருமையும் ஷாரூக்கிற்கு உண்டு.

Comments

Most Recent