ஜீவாவுடன் ஜோடி சேரும் ஸ்ரேயா!



மீண்டும் தமிழ்ப் பட வாய்ப்புகள் ஸ்ரேயா வீட்டுக் கதவைத் தட்டுகின்றன. அதில் முதல் வாய்ப்பாக ஜீவாவுக்கு ஜோடியாக ரவுத்திரம் எனும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

சற்று இடைவெளிக்குப் பிறகு ஆர்பி சவுத்திரி தயாரிக்கும் இந்தப் படத்தில் இணைவதன் மூலம், முதல்முறையாக ஜீவாவுடன் ஜோடி சேரும் 'பெருமையை'ப் பெறுகிறார் ஸ்ரேயா.

நடிகை காவேரியின் கணவரான இயக்குநர் சூர்யகிரணின் உதவியாளர் கோகுல் இந்தப் படத்தை இயக்குகிறார்.

பொங்கல் முடிந்த கையோடு, இந்தப்புதுப் படத்தைத் துவங்குகிறார் ஆர் பி சவுத்ரி.

இதர்கிடையே தனது முதல் மலையாளப்படமான போக்கிரி ராஜாவில் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ரேயா, இந்தப் படத்துக்காக பொள்ளாச்சியில் முகாமிட்டுள்ளார்.

பொங்கலுக்கு ரிலீசாகும் தனது குட்டி படத்தை கோவையில் ரசிகர்களுடன் பார்க்கப் போகிறாராம். இடையில் ஜக்கி வாசுதேவ் ஆஸ்ரமத்துக்கும் விசிட் அடிக்கும் திட்டத்தில் உள்ளாராம்.

Comments

Most Recent