ரூ 1.25 கோடி சம்பளம்... உயரப் பறக்கும் தமன்னா!!



தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார் தமன்னா.

நயன்தாரா, த்ரிஷா, அசின் என போட்டிக்கு யாருமே நெருங்கி வர முடியாத அளவுக்கு, தமிழ் நடிகைகளிலேயே அதிகபட்சமாக ரூ 1.25 கோடி சம்பளம் பெறுகிறார் அவர்.

தமன்னா நடிப்பில் அடுத்து வரும் அனைத்துப் படங்களுமே பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோக்கள் நடித்ததே.

ஜெயம் ரவியுடன் தில்லாலங்கிடி, விஜய்யுடன் சுறா, கார்த்தியுடன் பையா போன்ற படங்கள் அடுத்து வெளி வர உள்ளன.

இந்த நிலையில் கமல்ஹாஸனின் அடுத்த படத்தில் தமன்னாதான் நாயகி என்றும் அதற்கு அவருக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் ரூ 1.25 கோடி என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் தமன்னா இந்த செய்தியில் முதல் பாதியை மறுத்துள்ளார். கமல் தரப்பில் இன்னும் தன்னிடம் பேசவில்லை எனும் தமன்னா, தன்னுடைய சம்பளம் கணிசமாக உயர்ந்துவிட்டது உண்மையே என்றார்.

"காரணம் இல்லாமல் என் சம்பளம் உயரவில்லை. போன வருடன் நான் நடித்து வந்த அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட் ஆக ஓடின. இதனால் என் சம்பளமும் ஏறியுள்ளது. நான் ஒன்றும் சும்மா ஏத்தவில்லை... மார்க்கெட் இருக்கு, சம்பளத்தை ஏத்தறேன். அதைப் புரிஞ்சிக்கிட்டு தயாரிப்பாளர்கள் தருகிறார்கள்" என்கிறார் தமன்னா.

நியாயமான பேச்சுதான்..

Comments

Most Recent