எதிர்பார்த்தது போலவே, பொங்கலை முன்னிட்டு குட்டி, ஆயிரத்தில் ஒருவன், நாணயம், போர்க்களம் ஆகிய நான்கு படங்கள் மட்டும் திரைக்கு வந்துள்ளன. ஆயிரத...
எதிர்பார்த்தது போலவே, பொங்கலை முன்னிட்டு குட்டி, ஆயிரத்தில் ஒருவன், நாணயம், போர்க்களம் ஆகிய நான்கு படங்கள் மட்டும் திரைக்கு வந்துள்ளன.
ஆயிரத்தில் ஒருவன்: செல்வராகவன் ரொம்ப காலமாக இழுத்தடித்து எடுத்து முடித்துள்ள படம். பருத்திவீரன் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா நடித்துள்ளனர்.
குட்டி: தனுஷ் - ஸ்ரேயா நடித்து இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது. இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. முதல் முறையாக அண்ணனுடன் (ஆயிரத்தில் ஒருவன்) மோதுகிறார் தனுஷ்.
நாணயம்: பிரசன்னா, சிபிராஜ்(வில்லன்), சென்னை 28 வழங்கிய எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கேபிடல் பிலிம் ஒர்க்ஸ் தயாரித்துள்ளது.
போர்க்களம்: வெண்ணிலா கபடிக்குழு புகழ் கிஷோர் முதன் முதலாக ஹீரோவாக நடித்து, தாய்லாந்து இன்ஸ்டிடியூட் மாணவர் பண்டி சரோஜ்குமார் இயக்கியிருக்கும் போர்க்களம் பொங்கலுக்கு வெளிவந்துள்ளது.
இந்த நான்கு படங்களும் எப்படி என்பது போகப் போகத் தெரியும்.
Comments
Post a Comment