செல்வராகவன் - தனுஷைப் பாராட்டிய ரஜினி!



எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் அதைப் பார்த்துவிட்டு பாராட்ட வேண்டிய பொறுப்பில் இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

சமீப காலமாக ரிலீஸாகும் படங்களை அவருக்குப் போட்டுக் காட்டி அதை வைத்தும் விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள் சம்பந்தப்பட்ட படத் தயாரிப்புக் குழுவினர்.

அந்த வகையில், பொங்கலுக்கு ரிலீசான நான்கு படங்களில் தனது மருமகப் பிள்ளை தனுஷின் குட்டி மற்றும் தனுஷ் அண்ணனின் ஆயிரத்தில் ஒருவன் இரண்டையும் பார்த்தார் ரஜினி.

குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்தபோது, படத்தின் இயக்குநர் செல்வராகவன் ஆப்சென்ட். கார்த்தியும் தயாரிப்பாளர் ரவீந்திரனும்தான் வரவேற்று அழைத்துப் போனார்கள். படம் முடிந்த பிறகு, அந்தப் படத்தின் காட்சிகள் குறித்து ரஜினி நீண்ட நேரம் கார்த்தியுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டுச் சென்றாராம்.

பட லொகேஷன்கள் பற்றி கார்த்தியிடம் கேட்டு அறிந்து கொண்டாராம்.

அதேபோல, குட்டி படத்தைப் பார்த்த ரஜினி, தனுஷுக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

படத்துக்குப் படம் அவரது நடிப்பில் முன்னேற்றம் இருப்பதாகவும் அவர் கூறினாராம்.

மாப்பிள்ளையாச்சே, பாராட்டித்தானே ஆக வேண்டும்?!

Comments

Most Recent