ஹைதராபாத்: பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானைக் காண்பதற்குத் திரண்ட பெரும் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு பலர் காயமடைந்தனர். சல்மான் கான் நட...
ஹைதராபாத்: பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானைக் காண்பதற்குத் திரண்ட பெரும் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு பலர் காயமடைந்தனர்.
சல்மான் கான் நடித்துள்ள வீர் படம் தொடர்பான செய்தியாளர் கூட்டம் ஹைதராபாத் ஐமாக்ஸ் தியேட்டர் வளாகத்தில் நடந்தது. இதில் சல்மான் கலந்து கொண்டார்.
இந்த்த தகவல் பரவியதும் நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டு விட்டனர். இதனால் தியேட்டருக்கு வெளியே பெரும் கூட்ட நெரிசலாகி விட்டது.
பெரும் கூட்டம் கூடி விட்டதை அறிந்து சல்மான் கான் 2வது மாடியிலிருந்து கீழே பார்த்து கையசைத்தார். இதையடுத்து சல்மான் கானுக்கு கை அசைப்பதற்காக ரசிகர்கள் முண்டியடித்தனர்.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் கீழே விழுந்து காயமடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பும், பதட்டமும் நிலவியது.
Comments
Post a Comment