கவர்ச்சி- ஸ்னேகா அதிரடி



சினிமாவில் முடிந்தவரை தன் அழகை மூடி வைத்து, ரசிகர்களைக் கிறங்க வைத்த ஸ்னேகா, இனி முடிந்தவரை ஆடைக் குறைப்பு செய்ய முடிவெடுத்துள்ளார்.

சின்னா படத்தில்தான் முதலில் தன் அழகை வெளிச்சம் போடத் தொடங்கினார் ஸ்னேகா. 10 ஆண்டுகளாக பீல்டில் இருக்கும் அவர், எப்போதெல்லாம் தனக்கு வாய்ப்பும் மவுசும் குறைவதாய் தெரிகிறதோ, அப்போது கவர்ச்சி அஸ்திரத்தை எடுப்பார்.

அந்த வகையில், கைவசம் வெயிட்டான படங்கள் இல்லாத நிலையில், மீண்டும் கவர்ச்சி காட்டப் போவதாக அறிவித்துள்ளார் ஸ்னேகா.

ஏற்கெனவே கோவா படத்தில் நீச்சல் உடைக் காட்சியில் நடித்துள்ளார். விரைவில் அந்தப் படம் வெளிவரவுள்ளது. இந்தப் படத்துக்குப் பிறகு தனது ரேஞ்சே வேறு என்கிறாராம்.

இப்போது பவானி ஐபிஎஸ் படத்தில் நடிக்க உடற்பயிற்சி எல்லாம் செய்து, ஏற்கெனவே கச்சிதமாக உள்ள தனது உடலை இன்னும் சிக்கென்று மாற்றியுள்ளாராம்.

புதுப் பொலிவுடன் வலம் வரும் அவரைப் பார்த்த திரையுலக தோழிகள், 'நீ கவர்ச்சியாக களமிறங்கினால், திரையுலகமே கிறங்கிவிடும்' என்றார்களாம்.

இதையடுத்து ஸ்னேகாவும் முழுமையான கவர்ச்சிக்கு ஒப்புதலளித்துவிட்டாராம்.

அடுத்து அவர் நடிக்கும் பவானி ஐபிஎஸ் முழுக்க முழுக்க ஆக்ஷன் படம் என்பதால் இதில் சில காட்சிகளில் கவர்ச்சி மசாலா தூவப் போகிறார்களாம், ஸ்னேகா உதவியுடன்!.

Comments

Most Recent