ஆந்திராவில் தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கை வலுத்து வரும் நிலையில் அங்கு பிரபல தமிழ் நடிகைகள் நடித்து வெளிவர இருக்கும் படங்களைத் திரையிடுவதற...
நயன்தாரா ஜூனியர் என்.டீ.ஆர் ஜோடியாக நடித்த அடூர்ஸ் எனும் தெலுங்குப் படம் பொங்கலுக்கு ரிலீசாகிறது. அதேவேளை த்ரிஷா வெங்கடேஷ் இணைந்து நடித்த
'ஓம் நமோ வெங்கடேசா' எனும் படமும் ஜனவரியில் ரிலீசாகிறது. இவ்விரு படங்களையும் தயாரித்தவர்கள் ஒன்றுபட்ட ஆந்திராவை ஆதரிப்பவர்கள் என்பதால் இவற்றை தெலுங்கானாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என தெலுங்கானா பகுதி கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.
மேலும் அடூர்ஸ் படத்தில் நடித்த ஜூனியர் என்.டீ.ஆர் உட்பட தெலுங்கு நடிகர்கள் பலர் ஒட்டுமொத்தமாக ஆந்திராவை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் தெலுங்கானா பகுதிகளில் உள்ள தியேட்டர்களை போராட்டக் குழுவினர் தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்கள் படப்பிடிப்புக்களிலும் நுழைந்து ரகளை செய்வதால் படத் தயாரிப்பாளர்கள் சத்தமின்றி சென்னை மற்றும் தமிழகத்தில் சூட்டிங்கை நடத்துவதும் குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment