1 among 3 heroine, new experience in TVP - Dhanushree datta

http://cinema.dinakaran.com/cinema/gallery/kw428.jpg

‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தில் 2 ஹீரோயின்களுடன் நடித்தது புது அனுபவமாக இருந்தது என்றார் தனுஸ்ரீ தத்தா.
சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள படம் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’. விஷால், நீது சந்திரா, சாரா ஜென், தனுஸ்ரீ தத்தா நடித்துள்ள இப்படத்தை திரு இயக்கியுள்ளார். தமிழகம் முழுவதும் ஹிட்டாகியுள்ள இப்படத்தில் நடித்தது பற்றி தனுஸ்ரீ கூறியதாவது: இந்தப் படத்தில் ஜோதி என்ற எனது கேரக்டரை சொன்னதும் பிடித்திருந்தது. இதில் இன்னும் இரண்டு ஹீரோயின்கள் இருக்கிறார்கள் என்பதை முதலிலேயே சொல்லிவிட்டார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில் நாங்கள் தோழிகளாகி விட்டோம். எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை. அவர்களுடன் நடித்தது புது அனுபவமாக இருந்தது. பிரகாஷ் ராஜின் தங்கையாக நடித்த நான், அவருடைய நடிப்பை பார்த்து பிரமித்தேன். மொழி பிரச்னையாக இருந்ததா என்று கேட்கிறார்கள். தெரியாத மொழிகளில் நடிக்கும் போது சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால், எனது கேரக்டரை ஆங்கிலத்தில் எழுதி தந்திருந்ததால் வசதியாக இருந்தது. இப்போது இரண்டு இந்தி படங்களில் நடித்து வருகிறேன். தொடர்ந்து நல்ல கேரக்டர் கிடைத்தால் தமிழில் நடிப்பேன்.

Comments

Most Recent