Ajith fans attack on stunt master Jaguar Thangam's car

 http://thatstamil.oneindia.in/img/2010/02/18-ajith-thangam200.jpg

ஜாக்குவர் தங்கம காரை நொறுக்கிய அஜீத் ரசிகர்கள்!

 முதல்வருக்கு சினிமாக்காரர்கள் நடத்திய பாராட்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய அஜீத், விழாவில் பங்கேற்கச் சொல்லி நடிகர்கள் மிரட்டப்படுவதாக பேசினார். இதற்கு கைதட்டி பாராட்டு தெரிவித்தார் ரஜினி.

அஜீத்தின் பேச்சு பெரும் பரபரப்பை சினிமா உலகில் ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து ஒரு பத்திரிகைக்குப் பேட்டியளித்த சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் அஜீத்தை தாக்கிப் பேசியிருந்தார்.

எங்கிருந்தோ பிழைக்க வந்த அஜீத் போன்றவர்கள், திடீரென்று உயரத்துக்கு வந்ததும் தொழிலாளர்களை மறந்து விட்டு மனம் போன போக்கில் பேசுகிறார்கள். விழாவில் பேசியதற்கு அஜீத் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார் ஜாகுவார் தங்கம்.

இது அஜீத் ரசிகர்களைக் கடும் ஆத்திரத்துக்குள்ளாக்கியது. ஜாகுவார் தங்கத்தை எதிர்த்து போஸ்டர்கள் அடித்தனர்.

இந் நிலையில் சென்னை கே.கே.நகரில் உள்ள ஜாக்குவார் தங்கத்தின் வீட்டுக்கு நேற்று இரவு வந்த சில ரசிகர்கள், 'தலயவாடா தப்பா பேசுறே..' என்று சத்தமிட்டபடி, அவர் வீட்டுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த காரை அடித்து நொறுக்கினார்களாம். அப்போது ஜாகுவார் தங்கம் வீட்டில் இல்லை.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு மதுரையில் இருந்த ஜாகுவார் தங்கம் அவசரமாக கிளம்பி சென்னை வந்தார். இது தொடர்பாக காவல்துறை ஆணையரை சந்தித்து புகார் கொடுக்கப் போவதாக தெரிவித்துள்ளார். முதல்வரிடமும் புகார் தரவிருக்கிறாராம்.

யாருக்கும் பயப்பட மாட்டேன்...

இந் நிலையில் நடந்த சம்பவம் குறித்து ஜாகுவார் தங்கம் கூறுகையில், "அஜீத் பேசியது அபத்தம். தவறான ஒன்று. அவருக்கு தைரியம் இருந்தால் யார் மிரட்டினார்கள் என்று தைரியமாகச் சொ்ல்ல வேண்டும். அதைவிட்டுவிட்டு பொதுவாக சொல்லி மொத்த திரையுலகுக்கும் கிடைக்கவிருக்கும் நன்மைகளை கெடுத்துவிடக்கூடாது.

இந்த நல்ல நோக்கத்தில்தான் நான் கருத்து சொன்னேன். ஆனால் அஜீத்தோ தன் ரசிகர்களைத் தூண்டிவிட்டு என்னை மிரட்டுகிறார். இதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன்..." என்றார்.

Comments

Most Recent