கோவா படத்தில் குலுங்க குலுங்க ச ி ரிக்க வைத்த ஜெய்யின் ச ீ ரியஸ் முகத்தை வெளிக்கொண்டு வந்திருக்கும் படம், அவள் பெயர் தமிழரசி. இம்மாதம் தி...
கோவா படத்தில் குலுங்க குலுங்க சிரிக்க வைத்த ஜெய்யின் சீரியஸ் முகத்தை வெளிக்கொண்டு வந்திருக்கும் படம், அவள் பெயர் தமிழரசி. இம்மாதம் திரைக்கு வரும் இந்தப் படம் துபாய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதில் காதலியை தேடி அலையும் காதலனின் கதாபாத்திரம் ஜெய்க்கு. கதை இவரது பார்வையில் சொல்லப்படுகிறது. முதல் முறையாக மூன்றுவித கெட்டப்புகளில் ஜெய் தோன்றுகிறார்.
கெட்டப் என்றால் சினிமா சிஐடி-கள் குற்றவாளியை கண்டுபிடிக்கப் போடும் மாறு வேஷமல்ல. படத்தின் கதை மூன்று பருவங்களைத் தாண்டி பயணிக்கிறது. கல்லூரி மாணவன், திருமணமானவர், நடுத்தர வயது மனிதன் என மூன்று பருவங்களில் ஜெய் நடித்துள்ளார்.
நல்ல படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு தருவார்கள், இந்தப் படத்துக்கும் அது கிடைக்கும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார் படத்தின் இயக்குனர் மீரா கதிரவன்.

Comments
Post a Comment