நெல்லை: ஆபாச நடத்தில் நடித்ததாக குற்றம்சாட்டப்பட்ட நடிகை ஷகீலா, நடிகர் தினேஷ் உள்பட 9 பேர் மீதான வழக்கு விசாரணை அடுத்த மாதம் 22ம் தேதிக்க...
நெல்லை: ஆபாச நடத்தில் நடித்ததாக குற்றம்சாட்டப்பட்ட நடிகை ஷகீலா, நடிகர் தினேஷ் உள்பட 9 பேர் மீதான வழக்கு விசாரணை அடுத்த மாதம் 22ம் தேதிக்கு ஓத்தி வைத்து நெல்லை கோர்ட் உத்தரவிட்டது.
பாளையில் உள்ள சினிமா தியேட்டரில் கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி மலையாள ஆபாச படம் திரையிடப்பட்டது. இந்த ஆபாச படத்தில் நடித்ததாக நடிகை ஷகீலா, நடிகர் தினேஷ் மற்றும் தியேட்டர் மேலாளர் பாஸ்கரன், ஆபரேட்டர் பரமசிவன், வசீகரன், ஊழியர்கள் சிவசுப்பிரமணியன், சுப்பிரமணியன், முருகன், மாரிமுத்து, தாமஸ் மீது பாளை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு நெல்லை ஜேஎம் 1 கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நடிகை ஷகீலா, நடிகர் தினேஷ் பல்வேறு காரணங்களால் தங்களால் ஆஜாராக முடியவி்ல்லை என தனது வக்கீல் மூலம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் ராஜந்திர கண்ணன், வழக்கை அடுத்த மாதம் 22ம் தேதிக்கு ஓத்தி வைத்து உத்தரவிட்டார்.
Comments
Post a Comment