Marriage life is going smooth - Meena

http://thatstamil.oneindia.in/img/2010/02/25-meena-200.jpg

சென்னை: "என்னைப் பத்தி கிசுகிசுக்கள் வர்றது கல்யாணத்துக்கு முன்னேன்னா ஓகே... இப்போ கல்யாணம் முடிஞ்சி என் கணவருடன் சந்தோஷமாக பெங்களூரில் குடித்தனம் நடித்தும் போதும் கிசுகிசுக்கள் வந்தா எப்படி?" என்று சிணுங்குகிறார் நடிகை மீனா.

பெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் வித்யாசாகருடன் நடிகை மீனாவுக்கு கடந்த ஆண்டு ஜுலை மாதம் திருப்பதியில் திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பிறகும் மீனா தொடர்ந்து நடித்து வருகிறார். இதனால் அவருக்கும், அவருடைய கணவர் மற்றும் மாமியாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.

திருமணத்துக்குப்பின் மீனா நடிப்பதை வித்யாசாகர் குடும்பத்தினர் விரும்பவில்லை என்றும், அவர்களின் விருப்பத்தை மீறி மீனா நடிப்பதால், இருவரும் சட்டப்படி கோர்ட்டு மூலம் பிரியப் போகிறார்கள் என்றும் செய்திகள் பரவின.

இதுகுறித்து விளக்கமளித்த மீனா, 'நான் பெங்களூரில் என் கணவருடன் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வருகிறேன். என்னைப் பற்றியும், என் திருமண வாழ்க்கை பற்றியும் வேண்டும் என்றே சிலர் வதந்தியை பரப்புகிறார்கள்.

எனக்கும், என் கணவருக்கும் திருமண பேச்சுவார்த்தை நடைபெற்றபோது, நான் சினிமாவில் நடிப்பது பற்றி எந்தவித கருத்தும் பரிமாறப்படவில்லை.

நான் நடிக்க வேண்டும் என்றோ அல்லது நடிக்கக்கூடாது என்றோ என் கணவர் வீட்டில் நிபந்தனை எதுவும் விதிக்கவில்லை.

இப்போது என் திருமண வாழ்க்கை பற்றி பரப்பப்படும் வதந்தியால் என்னை விட, என் கணவர் தான் மிகவும் வருத்தப்படுகிறார்.

நான் சினிமாவில் 'பிஸி'யாக இருந்தபோது சிலர் கிசுகிசுக்களை பரப்பினார்கள். கல்யாணத்துக்கு முன்னே என்பதால் அது பரவாயில்லை என்று விட்டுவிட்டேன். இப்போது திருமணம் ஆன பிறகும் அதை தொடர்வது சரியா?

சினிமா மூலம் நம்மை எல்லாம் மகிழ்வித்த ஒரு பெண், திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பதே மனிதநேயம். அதை புரிந்துகொண்டு இனிமேலாவது என்னை பற்றி வதந்தியை பரப்ப வேண்டாம்.

என் கணவரும், மாமியாரும் என்னை அன்பாக பார்த்துக்கொள்கிறார்கள். இப்போது கூட அவர்கள் என்னை நடிக்க வேண்டும் என்றோ அல்லது நடிக்கக்கூடாது என்றோ கூறவில்லை.

திருமணத்துக்குப்பின் நான் அதிக படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டேன். நல்ல கதையம்சம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறேன்' என்றார்.

Comments

Most Recent