Selva plans for 5 Hero subject

 http://www.behindwoods.com/features/Interviews/Interview4/images-1/selva-20-10-08.jpg
ஐந்து நட்சத்திர இயக்குனர் என்றால் ஐந்து நட்சத்திர ஹோட்டல் வைத்திருப்பவர் என்று அர்த்தமில்லை. ஐந்து நட்சத்திரங்களை வைத்து படமெடுப்பவர் என்றும் பொருள் கொள்ளலாம்.

நான் அவன் இல்லை படத்தின் மூலம் தமிழில் பழையப் படங்களை ‌‌ீமேக் செய்யும் புதிய கலாச்சாரத்தை ஏற்படுத்தியவர் செல்வா. இந்தப் படத்தில் ஐந்து ஹீரோயின்கள் நடித்திருந்தனர்.

ஒரு ஹீரோயினிடம் நடிப்பு வாங்கவே விழி பிதுங்கிப் போகிறவர்களுக்கு மத்தியில் ஐந்து பேரும் அடித்துக் கொள்ளாதபடி படப்பிடிப்பை நடத்திய திறமைசாலி செல்வா. அது மட்டுமா? அதேமாதி‌ி ஒரு நடிகையர் பட்டாளத்தை வைத்து நான் அவன் இல்லை இரண்டாம் பாகத்தையும் எடுத்தார்.

தற்போது வினய்யை வைத்து அவர் இயக்கிவரும் ூற்றுக்கு ூறு படமும் ‌ீமேக் படம்தான். இதிலும் மூன்றுக்கு மேல் ஹீரோயின்கள் இருக்கிறார்கள். கும்பலாக படமெடுப்பதாலோ தெ‌ரியவில்லை, ஐந்து ஹீரோயின் இல்லாமல் யோசிக்கவே முடியாத நபராகிவிட்டார் செல்வா.

விரைவில் நாங்க என்ற படத்தை செல்வா தொடங்கவுள்ளார். இதிலும் ஐந்து ஹீரோயின்கள். ஒரு மாறுதலாக ஒரு ஹீரோவுக்குப் பதில் ஐந்து பேரைப் பயன்படுத்தப் போகிறாராம். பஞ்ச பாண்டவ மேனியாவாக இருக்குமோ?

Comments

Most Recent