Tele Cips


"நான் கடவுள்' படத்துக்குப் பின் புது சினிமா பற்றிய அறிவிப்புகளை வெளியிடாமல், பாலாவின் படத்தின் வாய்ப்புக்கு காத்திருந்த பூஜாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இலங்கையில் தங்கி சில டி.வி. ஷோக்களுக்காக சென்னை வந்து செல்லும் பூஜா இன்னும் பாலாவின் படத்தில் நடிக்க வாய்ப்பு வரும் என எதிர்பார்க்கிறாராம்.

ன் மற்றும் கலைஞர் குழுமங்களைத் தொடர்ந்து, விஜய் டி.வி.க்காக களம் இறங்குகிறார் குஷ்பு. விஜய் டி.வி.க்காக இதுவரை சீரியல்களில் மட்டுமே வந்தவர்,  இந்த மாத இறுதியில் ஒளிபரப்பைத் தொடங்கும் "அழகிய தமிழ் மகன்' (தமிழகத்தின் சிறந்த மணமகனுக்கான தேடல்) நிகழ்ச்சியை தொகுக்கப் போகிறார். சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்குப் பின் அவர் கலந்து கொள்ளும் புது நிகழ்ச்சி இது.

சை நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஜெயா டி.வி. மேலும் புதுமையான இசை நிகழ்ச்சியை இறக்குகிறது. டி.எம். சௌந்தரராஜன், பி.பி.ஷ்ரீனிவாஸ், ஏ.எம்.ராஜா உள்ளிட்ட ஜாம்பவான்கள் குரல் சாயலில் பாடுபவர்களுக்கு போட்டி வைக்கப் போகிறது. திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் தேடுதல் வேட்டையை தொடங்கியிருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு "பாடவா உன் பாடலை' என்பது பெயராம்.

"கோலங்கள்' சீரியலுக்குப் பின் கலைஞர் டி.வி.க்காக உருவாகியுள்ள "வாடகை வீடு' சீரியலில் நடிக்கிறார் தீபா வெங்கட். ""சீரியல்களில் கவனம் இல்லை. டப்பிங், சினிமா, காம்பயரிங் என பிஸியாக போய்க் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு திருமணத்தை முடிக்க திட்டமிட்டுள்ளேன். திருமணத்துக்குப் பின் சீரியல், சினிமா பற்றி முடிவெடுக்கவில்லை'' என்றார் தீபா.

"மானாட மயிலாட' நிகழ்ச்சியின் 5}ம் பகுதியை புதுமையான முறையில் இறக்கப் போகிறது கலைஞர் டி.வி. பெண்கள் அல்லாமல் ஆண்கள் மட்டுமே கலந்து நடனமாடப் போகிறார்களாம். கலா இருந்த இடத்தில் பிருந்தா இருப்பாராம். கழட்டி விடப்பட்ட ரம்பா மீண்டும் நடுவராகிறார். குஷ்பு, நமீதாவுக்கு இடம் இல்லையாம்.

திருமணமான நடிகைகள் சென்னை வரும் போது ரியாலிட்டி ஷோக்களில் கவனம் செலுத்துவது வழக்கம். அந்த வரிசையில் காயத்ரி ஜெயராம் இந்த ஆண்டு விடுமுறையை சன் டி.வி.யின் "ராணி ஆறு ராஜா யாரு?' நிகழ்ச்சியில் கழித்து வருகிறார். சென்ற ஆண்டு விஜய் டி.வி.க்காக ரியாலிட்டி ஷோ செய்தவரை இந்த முறை சன் குழுமம் ஒப்பந்தம் செய்துள்ளது.

"மெட்டி ஒலி' சீரியலுக்குப் பின் "எம்டன் மகன்' உள்ளிட்ட படங்களை இயக்கி சினிமாவுக்கு வந்த திருமுருகன், மீண்டும் சீரியல் இயக்கும் திட்டம் வைத்திருக்கிறாராம். கதை விவாதம், தயாரிப்பு நிறுவனத்தின் ஒப்புதல் முடியும் தருவாயில் இருக்கிறது. "மெட்டி ஒலி'யில் நடித்த சிலரை இதிலும் நடிக்க வைக்க பேச்சு நடக்கிறதாம்.

விஜய் டி.வி.யின் "நடந்தது என்ன?' டீம் விசிட் அடித்த "பாபா குகை', "ஹரித்துவார் கும்பமேளா', "அகோரிகளின் வாழ்க்கை' என அனைத்து இடங்களுக்கும் சன் டி.வி.யின் "நிஜம்' டீமும் விசிட் அடித்து திரும்பி விட்டது. சன் நியூஸ், சன் டி.வி. என மாறி மாறி ஒளிபரப்பானலும், டி.ஆர்.பி.யில் விஜய் டீமின் விசிட்டே முக்கியத்துவம் பிடித்திருக்கிறதாம்.

மிழ் சினிமாவில் வரலாறு படைத்த ஜாம்பவான்களின் வாழ்க்கையை படம் பிடிக்கும் கலைஞர் டி.வி.யின் "மறக்க முடியுமா?' நிகழ்ச்சி கலைவாணருக்குப் பின், பீம்சிங், சுருளிராஜன், சந்திரபாபு என சாதனையாளர்களின் வாழ்க்கையை படம் பிடிக்கப் போகிறதாம்.

Comments

Most Recent