ஜானி, சனுஷா நடித்த ‘ரேனிகுண்டா’ படத்தை இயக்கிய பன்னீர்செல்வம், அடுத்து ஜானி நடிக்கும் ‘18 வயசு’ படத்தை இயக்க முடிவானது. ஆனால், திடீரென்...
ஜானி, சனுஷா நடித்த ‘ரேனிகுண்டா’ படத்தை இயக்கிய பன்னீர்செல்வம், அடுத்து ஜானி நடிக்கும் ‘18 வயசு’ படத்தை இயக்க முடிவானது. ஆனால், திடீரென்று தெலுங்கு படம் இயக்க சென்றார். இப்போது அப்படத்தை இயக்கவில்லை. மீண்டும் ‘18 வயசு’ படத்தையே இயக்குகிறார். "ஆந்திராவில் தெலங்கானா பிரச்னை நீடிப்பதால், தெலுங்கு படம் இயக்க தாமதமாகிறது. எனவே, மீண்டும் ஜானி நடிக்கும் ‘18 வயசு’ படத்தை இயக்குகிறேன். என் 20 ஆண்டு கால நண்பர் ராஜசேகரை இசையமைப்பாளராக அறிமுகம் செய்கிறேன்’' என்றார் பன்னீர்செல்வம்.
Comments
Post a Comment