"நான் ரெண்டு காலு சிங்கம் என் பார்வை பட்டா சூரியனும் மங்கும் என் ஆட்சி வந்தா எங்கும் தங்கப் பானையில் சோறு பொங்கும்' என்ற ரீதி...
"நான் ரெண்டு காலு சிங்கம்
என் பார்வை பட்டா சூரியனும் மங்கும்
என் ஆட்சி வந்தா எங்கும்
தங்கப் பானையில் சோறு பொங்கும்' என்ற ரீதியில் தான் இருக்கின்றன, புதுமுக நாயகனின் அறிமுகப் பாடல்கள். என்னமோ திட்டத்தோடு திரையுலகில் காலடி எடுத்துவைக்கும் நடிகர்களையும், வழக்கமான தமிழ்சினிமாவின் காட்சிகளையும் "தமிழ்ப்பட'த்தில் அச்சு அசலாக (விமர்சிக்காமல்) எடுத்திருந்தார் டைரக்டர் அமுதன். இந்தப் படம், தங்களை இழிவுபடுத்துவதாக பலரும் குமுறுகின்றனர். இருப்பினும், தயாரிப்பாளர் தயாநிதி அழகிரிக்காக அமைதி காத்தனர். அடக்கி வைத்திருந்த கோபம் முழுவதையும், தற்போது டைரக்டர் அமுதன் மீது திரும்பியுள்ளனர்.
சமீபத்தில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமுதனிடம், யாரும் முகம் கொடுத்துக்கூட பேசவில்லை. மேடையில் இறுக்கமாக அமர்ந்திருந்த அமுதன், சம்பந்தப்பட்ட படத்தைப் பற்றிப் பேச அழைக்கப்பட்டார். "இங்கு இவனுக்கு என்ன வேலை என நீங்கள் நினைக்கக்கூடும். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மகன், எனது நெடுநாளைய நண்பர். அதனால்தான் வந்துள்ளேன்' என தனது நிலையை நாசூக்காக வெளிக்காட்டினார்.
Comments
Post a Comment