‘தண்டச்சோறு’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் லிவிங்ஸ்டன் கூறியதாவது: நான், கதை, திரைக்கதை, வசனம் எழுதும் படம் ‘தண்டச்சோறு’. இருதயரா...
‘தண்டச்சோறு’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் லிவிங்ஸ்டன் கூறியதாவது: நான், கதை, திரைக்கதை, வசனம் எழுதும் படம் ‘தண்டச்சோறு’. இருதயராஜ், இயக்குகிறார். நடிக்க வருவதற்கு முன், மெல்லிசைக் குழுக்களில் பாடிய அனுபவம் உண்டு என்பதால், இப்படத்துக்கு நானே இசையமைக்கிறேன். தவிர, பாதிரியார் வேடத்திலும் நடிக்கிறேன். அழகு என்பது நிரந்தரம் இல்லை. புற அழகை விட, அக அழகுதான் சிறந்தது, நிரந்தரமானது என்பதை வலியுறுத்தும் கதை இது. புதுமுகங்கள் நடிக்கின்றனர். மே மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. இவ்வாறு லிவிங்ஸ்டன் கூறினார்.
Comments
Post a Comment