Mirchi Siva in Venkat Prabhu's direction

http://cinema.dinakaran.com/cinema/gallery/kw598.jpg
வெங்கட் பிரபு இயக்கும் ‘பூச்சாண்டி’யில் சிவா நடிக்கிறார். ‘சென்னை 28’, ‘சரோஜா’, ‘கோவா’ படங்களுக்கு பின் வெங்கட் பிரபு இயக்கும் படம் ‘பூச்சாண்டி’. இதை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கிறார். ‘தமிழ்ப் படம்’ சிவா, பிரேம்ஜி ஹீரோவாக நடிக்கின்றனர். ஹீரோயின்கள் தேர்வு நடக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மே முதல் ஷூட்டிங் தொடங்குகிறது.

இதுபற்றி வெங்கட் பிரபு கூறும்போது, ‘எனது முதல் படம் கிரிக்கெட் பற்றியது. ‘சரோஜா’, த்ரில்லர். ‘கோவா’, இளைஞர்களின் காதலை சொன்னது. இந்த மூன்றுக்கும் இருந்த ஒற்றுமை, காமெடி. ‘பூச்சாண்டி’யிலும் காமெடி இருக்கும். ஆனால் கதைக் களம் புதிதாக இருக்கும். இதுவரை நான் சொல்லாத விஷயத்தை இதில் சொல்லப்போகிறேன்’ என்றார்.

Comments

Most Recent