ஊ ருக்கெல்லாம் பிரம்மச்சரியம் மற்றும் அதன் அருமை பெருமை, அதனால் கிடைக்கிற ‘சித்திகளை’ அள்ளிவிட்டுக் கொண்டிருந்த போலிச் சாமியார் நித்யானந...
ஊருக்கெல்லாம் பிரம்மச்சரியம் மற்றும் அதன் அருமை பெருமை, அதனால் கிடைக்கிற ‘சித்திகளை’ அள்ளிவிட்டுக் கொண்டிருந்த போலிச் சாமியார் நித்யானந்தனை கிட்டத்தட்ட மறக்க ஆரம்பித்துவிட்டார்கள் மக்கள். மறதி நம் தேசிய வியாதி என்பதால் யாரையும் ஒன்றும் சொல்வதற்கில்லை!
ஆனாலும் நித்யானந்தாவின் பழைய லீலைகள் ஒவ்வொன்றாக அம்பலத்துக்கு வந்தவண்ணம் உள்ளன.
நடிகை ரஞ்சிதாவுடன் ‘காம ஆராய்ச்சி’ செய்ததைப் போலவே, இந்த காமச் சாமி நடிகை யுவராணியிடமும் ‘ஆராய்ச்சி’யை நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன… அதுவும் முழு நிர்வாணமாக!
யுவராணியுடனும், நித்தியானந்தன் உறவு வைத்திருந்ததாக ஏற்கெனவே அரசல் புரசலாக செய்தி வந்தாலும், அதுகுறித்து ஆதாரப்பூர்வமாக ஏதும் சொல்லப்படவில்லை முதலில்.
இந் நிலையில், நித்யானந்தன் – யுவராணியின் செக்ஸ் வீடியோ வெளியாகியிருப்பதாகக் கூறப்படுகிறது .
இவர்கள் இருவரும் இடம் பெற்றுள்ள இந்த வீடியோ காட்சிகளை பிரேசிலில் சர்வரைக் கொண்டுள்ள ஒரு இணையத் தளம் வெளியிட்டுள்ளது.
நித்தியானந்தாவின் தீவிர பக்தை என்று சமீபத்தில்தான் யுவராணி பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருந்தார். எந்த அளவு தீவிர பக்தை என்பதை இப்போது வெளியாகியுள்ள வீடியோக்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
நித்தியானந்தாவின் ‘தீ…விர சிஷ்யை’களில் ஒருவரான நடிகை ராகசுதாதான் யுவராணிக்கும் நித்தியானந்தாவுக்கும் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து தெலுங்கு செய்திச் சேனல்கள் நேற்று முழுவதும் செய்தி வெளியிட்டபடி இருந்தன. தமிழ் மீடியாக்கள் கண்டு கொள்ளவில்லை (போரடித்துவிட்டது போலிருக்கிறது!).
யுவராணியின் மறுப்பு!
இந்த வீடியோ குறித்த செய்தி வெளியானதும் முதலில் அமைதி காத்த யுவராணி, இப்போது மறுப்பு வெளியிட்டுள்ளார்.
பல லட்சம் பேர்களில் ஒருத்தியாகவே நான் நித்யானந்தனைப் பார்த்தேன் என்றும், தன்னைப் போலவே பல நடிகைகள் நித்யானந்தனைப் பார்த்தாலும் தன் பெயர் மட்டும் இப்படி வெளிச்சத்துக்கு வந்தது ஏன் என்று தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
‘சாமியாரைப் பற்றி இப்படியெல்லாம் செய்திகள் வரும் என்று யாரும் எதிர் பார்க்க வில்லை. அதனால்தான் அவரைப் பார்த்தோம். இல்லாவிட்டால் அவரை ஏன் பார்க்கப் போகிறோம். என் மேல் மட்டும் வயிற்றெரிச்சலால் அவதூறு பரப்புகின்றனர். திருமணமாகி குடும்பம் நடத்தும் ஒரு பெண்ணை இது போல் அசிங்கப்படுத்தலாமா?’ என்றும் அலர் கேட்டுள்ளார்.
முன்ஜாமீனுக்கு தீவிர முயற்சி செய்யும் நித்யானந்தன்!
இந்நிலையில், மார்ச் 19-ம் தேதி பெங்களூர் ஆசிரமத்துக்கு வருவேன் என்று மறைந்திருந்து பேட்டிகள் அளித்து வந்த நித்யானந்தன், இதுவரை பெங்களூர் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. எங்கிருக்கிறார் என்றும் தெரியவில்லை. போலீசாரும் அவர் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்றே தெரியாத நிலை.
ஆனாலும் அவர் மீது போலீசில் புகார்கள் குவிகின்றன. இதுவரை 20க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் அண்ணன் எஸ்.எம்.சங்கரின் மகன் குருசரணும் பிடதி போலீசில் நித்யானந்தா மீது புகார் கொடுத்தார்.
எனவே போலீசாரிடம் கைதாவதைத் தவிர்க்க முன்ஜாமீன் பெறும் முயற்சிகளும் நித்யானந்தன் முயன்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நித்யானந்தா சார்பில் அவரின் வழக்கறிஞர் இந்த மனுவை நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
Comments
Post a Comment