No Tamil films due to bad story line - Sada


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த சதா திடீரென்று காணாமல் போனார். ஜெயம் ரவி ஜோடியாக அறிமுகமான “ஜெயம்” படம் 2003-ல் ரிலீசானது.
பின்னர் எதிரி, வர்ணஜாலம் படங்களில் நடித்தார். விக்ரம் ஜோடியாக நடித்த “அந்நியன்” படம் பரபரப்பாக பேசப்பட்டது. கடைசியாக “உன்னாலே உன்னாலே” படத்தில் நடித்தார்.
2006-ல் இப்படம் வந்தது. அதன் பிறகு இந்தி, தெலுங்கு பக்கம் போனார். தமிழ் படங்களில் நடிக்கவில்லை. 4 வருடங்களுக்கு பிறகு ஷபுலி வேஷம் என்ற படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார்.
பி.வாசு இயக்கும் இப்படத்தில் ஆர்.கே. கதாநாயகனாக நடிக்கிறார். அவரே தயாரிக்கவும் செய்கிறார். இவர் ஷஎல்லாம் அவன் செயல்’, ஷஅழகர் மலை’ படங்களில் கதாநாயகனாக நடித்தவர்.
இப்படத்தில் நடிப்பது பற்றி சதா கூறியதாவது:-
அந்நியன், உன்னாலே உன்னாலே படங்களுக்கு பிறகு தமிழில் நீண்ட இடைவெளி ஏற்பட்டுவிட்டது. சிறந்த கேரக்டரில் நடிப்பது இல்லாவிட்டால் நடிக்காமல் இருந்து விடுவது என்ற முடிவில் இருந்தேன். நிறைய தமிழ்ப்பட வாய்ப்புகள் வந்தன. கதையும், கேரக்டரும் சரி இல்லாததால் நடிக்க மறுத்தேன்.
புலி வேஷம் கதையும், கதாபாத்திரமும் ரொம்ப பிடித்ததால் நடிக்க சம்மதித்தேன். இயக்குனர் வாசு இதற்கு முன் இருபடங்களில் நடிக்க கேட்டும் சந்தர்ப்பம் அமையவில்லை. அந்த குறையும் இந்த படம் மூலம் நீங்கிவிட்டது என்றார்.

Sadha who was a leading actress in Tamil film industry was found missing all of a sudden. She made her debut in the film Jayam and paired with Jayam Ravi which was released 2003.

After this she continued to act in Ethri and Varnam. She had also paired with Vikram in the hit film Anniyan. Finally she had acted in Unnale Unnale. This film was released in 2006. After this she switched over to Telugu and Hindi films.

There after she had not acted in Tamil films. Now after four years she is making her re-entry into Tamil cinema through the film Puli Vesham. P Vasu is directing this film. R K is doing the lead role as well as producing this film.

R K had done the lead role in the films Ellam Avan Seyal and Azhagar Malai. Sadha while speaking about acting in this film said,” It is true that there was a long gap in Tamil after Anniyan and Unnale Unnale.I had decided not to act in films which had no good roles.

I got lot of offers in Tamil. I refused to act because the story and character was not good. I agreed to act in Puli Vesham since the story and role was very good. I was not able to act in P Vasu’s two earlier films due to my prior commitment. Now that has been fulfilled through this film.”

Comments

Most Recent