One here and 21 Heroines



ஊர்வசி – லலிதா – லலிதா – லாவண்யா இந்த பெண்பால் பெயர்களை சுருக்கி உருவாகி வரும் படம் ஊலலலா. பிரபல பட அதிபர் ஏ.எம்.ரத்னத்தின் வாரிசும், கேடி, எனக்கு 20 உனக்கு 18 படங்களின் இயக்குனருமான ஏ.எம்.ஜோதிகிருஷ்ணா திரைக்கதை எழுதி இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடிக்கிறார். இப்படத்தின் கதைக்களம் இளம் ஆண்களுக்கும், இளம் பெண்களுக்கும் இடையே உள்ள நட்புதானாம். பாய்ஸூக்கும், கேர்ள்ஸூக்கும் இடையே உள்ள நடப்பு கடைசி வரை நட்பாக மட்டுமே இருக்குமா? இல்லை காதலாக மாறுமா? என்பதை சொல்லும் கதைக்கருவைக் கொண்ட இப்படத்தில் மொத்தம் 21 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள் என்கிறார் ஹீரோ ‌ஜோதி கிருஷ்ணா. முக்கிய நாயகியாக ப்ரீத்தி பண்டாரி நடிக்க அவருடன் மேலும் 20 நாயகிகள் நடிக்கிறார்கள். ஒவ்வொருத்தருக்கும் தனிச்சிறப்பான கேரக்டர் கொடுத்திருப்பதாக கூறும் ஜோதிகிருஷ்ணா, ஊலலலாவை மே மாதம் ரீலிஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம்.

Comments

Most Recent