அரசியல், சமூக பின்னணியை கொண்டு கமர்சியலாக உருவாகிறது ‘திருத்தணி’. தென்காசியில் படப்பிடிப்பு நடந்தது. ‘யம்மா யம்மா யம்மா’ என்று டி.ராஜேந்தர்...
அரசியல், சமூக பின்னணியை கொண்டு கமர்சியலாக உருவாகிறது ‘திருத்தணி’. தென்காசியில் படப்பிடிப்பு நடந்தது. ‘யம்மா யம்மா யம்மா’ என்று டி.ராஜேந்தர் பாடிய பாடலுக்கு பரத்&சுனேனா நடித்தனர். இப்படத்தின் இசை பொறுப்பை நான் ஏற்றிருக்கிறேன். அடுத்து சொந்த படம் தயாரிக்க கதை கேட்டு வருகிறேன். இதற்கிடையில் வழக்கமான கமர்சியல் கதையாக இல்லாமல் கிராமத்து பின்னணியில் நம் கலாசாரத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் படத்தை இயக்குகிறேன். ஹீரோ தெரிந்த முகமாக இருப்பார். மற்ற நடிகர், நடிகைகளை காரைக்குடி, உசிலம்பட்டி பகுதியில் தேர்வு செய்ய உள்ளேன். ‘திருப்பாச்சி‘ படத்திலேயே கிராமத்து கதையை தொட்டிருக்கிறேன். இப்போது இயக்கவுள்ள படம், முழுக்க முழுக்க கிராமங்களிலேயே படமாக உள்ளது. இவ்வாறு பேரரசு கூறினார்.
Comments
Post a Comment