Sameera and Rajini paring for Chandramuki 2

http://www.extramirchi.com/gallery/albums/userpics/10003/normal_SameeraReddy006.jpg
சந்திரமுகி-2 தமிழ் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்க சமீரா ரெட்டி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினிகாந்த சந்திரமுகி-2க்கு ஒப்புதல் அளித்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த சில தினங்களாக ரஜினிகாந்துடன் இது தொடர்பாக தொடர்பில் இருக்கிறார் இயக்குனர் பி.வாசு.

கன்னடத்தில் வெளியான ஆப்தமித்ரா தான் தமிழில் சந்திரமுகியாக ஏற்கனவே வெளியாகி சக்கை போடு போட்டது அனைவரும் அறிந்ததே. அதே போல் கன்னடத்தில் வெளியான 'ஆப்த ரக்ஷகா'வைத் தழுவி சந்திரமுகி-2 எடுக்கப்படும் என்று தெரிகிறது.

ஒரிஜினல் கதையில் சில மாற்றங்களுடன் தமிழில் வெளியாகும் எனத் தெரிகிறது. நடிகர் பிரபு மற்றும் நடிகர் வினீத் ஆகியோரும் இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

Comments

Most Recent