எனக்கு முழு சுதந்திரம் இருந்தால்தான் ஒரு படத்தில் நடிப்பேன். படம் ஆரம்பிக்கும் முன்பே என்னைக் கட்டுப்படுத்த முயல்வதை விரும்பவில்லை. அதனால்...
எனக்கு முழு சுதந்திரம் இருந்தால்தான் ஒரு படத்தில் நடிப்பேன். படம் ஆரம்பிக்கும் முன்பே என்னைக் கட்டுப்படுத்த முயல்வதை விரும்பவில்லை. அதனால்தான் கோ படத்திலிருந்து விலகினேன். நான் நடிக்க கமிட் ஆனதுமே முடியை வெட்டச் சொன்னார் அந்த இயக்குநர்" என்றார் நடிகர் சிம்பு.
சமீபத்தில் நிருபர்களைச் சந்தித்த சிம்பு, விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நடித்தது மற்றும் தனது திருமணம் பற்றி பேசினார்.
அவர் கூறுகையில், "விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் என் கேரக்டரை நான் பெரிதும் விரும்பினேன். இனி இந்த மாதிரி தேர்ந்தெடுத்து நடித்தால் போதும் என்று முடிவு செய்துவிட்டேன்.
எனக்கும் த்ரிஷாவுக்கும் காதல் என்பதெல்லாம் சும்மா. நானும் த்ரிஷாவும் சிறு வயதிலிருந்து நண்பர்கள். இதில் காதலுக்கு இடமில்லை. என் தங்கை இலக்கியா திருமணத்துக்குப் பிறகு, வீட்டில் பெற்றோர் பார்க்கும் ஒரு சாதாரணப் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்.
எனது அடுத்தபடம் இன்னும் முடிவாகவில்லை. கோ படத்தில்தான் நடிப்பதாக இருந்தேன். ஆனால் அந்தப் படத்தின் இயக்குநர், நான் கமிட் ஆன அடுத்த நிமிடமே, முடியை வெட்டு.. இதைப் பண்ணாதே, இப்படித் திரும்பாதே என்று ஓவராக என்னை கட்டுப்படுத்த ஆரம்பித்துவிட்டார். எனக்கு இதுதான் பிடிக்கவில்லை. என் சுதந்திரம் முக்கியம். அதனால்தான் விலகிக் கொண்டேன்..." என்றார்.
Comments
Post a Comment