Tele Chips - Behind Television Channels

http://cache.techie-buzz.com/images/stories/2008/12/freeindiantelevisiononline.png
"அரசி' மற்றும் "அபிராமி' தொடர்களில் பிஸியாக இருக்கும் ராதிகாவும், கௌதமியும் முதன் முறையாக விஜய் டி.வி.யின் "ஜோடி நம்பர் ஒன்' நிகழ்ச்சிக்கு நடுவராக பொறுப்பேற்று இருக்கிறார்கள். "உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' நிகழ்ச்சியின் ஒரு பகுதிக்கு சிறப்பு விருந்தினராக வந்ததுதான் கௌதமியின் கடைசி விஜய் டி.வி. விஜயம். ராதிகாவுக்கு இதுதான் முதல் விஜயம்.

கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்த ஜெயா டி.வி.யின் "ராகமாலிகா', இனி வரும் சுற்றுகளில் 8 முதல் 13 வயதுக்குள்ளானவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப் போகிறது. இந்த சுற்றுகளுக்கு நடுவராகப் பொறுப்பேற்கிறார் பாடகி பி.சுசீலா. இந்த வரிசையில் அடுத்த மாதம் முதல் "ஹரியுடன் நான்' என்ற இசை நிகழ்ச்சியையும் களம் இறக்குகிறது ஜெயா தரப்பு.

பாண்டியராஜன் - அர்ச்சனாவை வைத்து "கலக்கப் போவது யாரு? ஜூனியரை' இந்த வாரம் முடிக்கப் போகிறது விஜய் டி.வி. தமிழ் தொலைக்காட்சியின் காமெடி ரியாலிட்டி ஷோவுக்கு முன்னோடியான இந்த நிகழ்ச்சியை மீண்டும் புதுப் பாணி மற்றும் பொலிவுடன் இறக்கும் திட்டத்தையும் வைத்திருக்கிறதாம் விஜய் நிர்வாகம். இதற்காக முன்னணி நகைச்சுவை நடிகர்களை நடுவராக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.

தமிழ்ப் படத்தைத் தொடர்ந்து ஒரு பாடலுக்கு நடனம், சீரியல் என வாய்ப்புகள் வந்த போதிலும், அனைத்தையும் மறுத்து, தற்போது "சன் குடும்ப விருது'களில் அமர்ந்திருக்கிறார் கஸ்தூரி. இந்த நிகழ்ச்சிக்காக இதற்கு முன் சீரியல்களே பார்த்திராத அவருக்கு "கோலங்கள்', "அரசி' உள்ளிட்ட சீரியல்களின் முக்கிய காட்சிகள் தனியே காட்சியிடப்பட்டிருக்கிறது.

Comments

Most Recent