தொடர்ந்து சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது விண்ணைத்தாண்டி வருவாயா. ஜீவாவின் கச்சேர ி ஆரம்பம் படத்தாலும் கௌத...
தொடர்ந்து சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது விண்ணைத்தாண்டி வருவாயா. ஜீவாவின் கச்சேரி ஆரம்பம் படத்தாலும் கௌதம் படத்தை பின்னுக்குத் தள்ள முடியவில்லை.
5. தீராத விளையாட்டுப் பிள்ளை
விஷாலின் இந்தப் படம் குடும்ப ஆடியன்ஸ் எனப்படும் பெண்களை கவரவில்லை. மேலும், இளைஞர்களையும் இப்படம் பெரிதாக கவரவில்லை. இயக்குனர் திருவின் காலாவதியான கமர்ஷியல் ட்ரீட்மெண்டே இதற்கு காரணம். ஐந்து வாரங்கள் முடிவில் 1.8 கோடிகளை வசூலித்திருக்கும் இப்படம் சென்ற வார இறுதியில் 4 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது.
4. மாத்தியோசி
நந்தா பெரியசாமியின் மாத்தியோசி சமீபத்தில் வந்தப் படங்களில் ரசிகர்களை அதிகம் எரிச்சலடைய வைத்தப் படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. சவசவ திரைக்கதை படத்தின் மிகப்பெரிய மைனஸ். இரண்டாவது, லாஜிக் இல்லாத காமா சோமா காட்சிகள். ஒரு வாரத்தில் 24 லட்சங்களை வசூலித்த இந்தப் படத்தின் சென்ற வார இறுதி மூன்று நாள் வசூல், 4.7 லட்சங்கள்.
3. முன்தினம் பார்த்தேனே
மகிழ் திருமேனியின் இந்தக் காதல் படம் சுமாரான வரவேற்பை பெற்றிருக்கிறது. பத்திரிகைகளின் விமர்சனம் அதிக ரசிகர்களை திரையரங்குக்கு ஈர்க்கும் என்று நம்பலாம். முதல் மூன்று தினங்களில் இப்படம் வசூலித்திருப்பது 7.7 லட்சங்கள்.
2. கச்சேரி ஆரம்பம்
அலட்டலான திரைக்கதையும், காட்சிகளும் கச்சேரி ஆரம்பத்தை கலகலப்பாக நகர்த்துகிறது. இரண்டாம் பகுதியில் திரைக்கதை டல்லடிப்பது சோதனை. காமெடியும், வடிவேலும் படத்தின் ஆபத்பாந்தவர்கள். முதல் மூன்று தினங்கள் 21.5 லட்சங்களை இப்படம் வசூலித்துள்ளது.
1. விண்ணைத்தாண்டி வருவாயா
இந்த வாரமும் அசைக்க முடியாத அதே முதலிடத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா. மூன்று வாரங்கள் முடிவில் 3.9 கோடிகளை வசூலித்து ஹிட் லிஸ்டில் இணைந்திருக்கும் இப்படம், சென்ற வார இறுதியில் மட்டும் 45 லட்சங்களுக்கு மேல் வசூலித்துள்ளது.
Comments
Post a Comment