Vijay in full speed

தனது 50-வது படமான "சுறா'வின் படப்பிடிப்பை மூன்று மாதங்களில் முடித்து வந்திருக்கிறார் விஜய். சங்கிலி முருகன் தயாரிப்பில் எஸ்.பி.ராஜ்குமார் இயக்கியுள்ள இப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகிறது. ஏப்ரல் இறுதியில் ரிலீஸ் ஆகலாம் எனத் தெரிகிறது.

"வேட்டைக்காரன்' படத்தின் ரிலீசுக்கு ஏற்பட்ட கால தாமதம் மற்ற படங்களுக்கு ஏற்படக் கூடாது என்பதில் விஜய் கவனமாக இருப்பதாகத் தெரிகிறது. இதனால் அடுத்தடுத்த பணிகளில் வேகம் காட்டி வருகிறார். 
தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற "பாடிகாட்', 51-வது படமாக உருவாகிறது. நீண்ட இடைவெளிக்குப் பின் அசின் இப்படத்தில் நடிக்கிறார். ஏப்ரல் முதல் தேதியில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்நிலையில் லிங்குசாமி, மாதேஷ், ரமணா உள்ளிட்ட சிலர் விஜய்க்கு கதை சொல்லியிருக்கிறார்கள்.

Comments

Most Recent