விஜய் அளவுக்கு கோலிவுட்ல வேகமாக செயல்படும் மாஸ் ஹீரோ யாரும் இல்லை என்பது மீண்டும் நிரூபனமாகியிருக்கிறது. விஜயின் 50-வது படமான சுறா படத்தின...
ஆனால் இவர்களில் யாருமே இல்லை...முன்பு விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த ஃபிரெண்ட்ஸ் படத்தின் இயக்குனர் மலையாள சித்திக் என்பதை திட்டவட்டமாக முடிவுசெய்து விட்டார் விஜய். மேலும் தனது 51-வது படத்துக்கான இசையமைப்பை இப்போதே முடித்துவிட்டார்.
இதில் மிகப்பெரிய ஆச்சர்யம் என்னவென்றால்... பத்ரி, மதுர, கில்லி போன்ற விஜயின் சூப்பர்ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர் வித்யாசாகர். “எனது 51-வது படத்துக்கும் அவர்தான் இசையமைக்க வேண்டும்” என இயக்குனர் சித்திக்கிடம் பிடிவாதமாகச்சொல்லி, ஆறு டூயூன்களை அதிரடியாக கம்போஸ் செய்ய வைத்து, அந்த டூயூன்களுக்கு யுகபாரதியை பாடல்கள் எழுதவைத்து ரெக்கார்டிங் வரை வந்துவிட்டார் என்றால் விஜயின் வேகத்தை பாருங்கள். சித்திக் மலையாளத்தில் இயக்கி அங்கே மிகப்பெரிய ஃபாக்ஸ் ஆபீஸ் வெற்றிபெற்ற படம் ‘பாடிகார்ட்’. அதைத்தான் விஜயின் 51-வது படமாக ரீமேக் செய்கிறார் சித்திக். கதாநாயகி அசின் என்பது முடிவாகிவிட்டது. ஜூன் 10-ஆம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார்களாம். படத்தை இந்த ஆண்டின் தீபாவளிப் பண்டிக்கைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுத்தான் இத்தனைவேகத்தைக் காட்டுகிறார் விஜய் என்கிறார்கள் சித்திக் வட்டாரத்தில். ஏன்? தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கும் எந்திரனோடு மோதியே ஆகவேண்டும் என்பது விஜயின் தந்தை எஸ்.ஏ.சியின் அதிரடி உத்தரவாம்.
விஜயின் வளர்ச்சியை பொறுக்காத ரஜினி... அஜித் விவகாரத்தில் ஒருதலைப் பட்சமாக அவரை சப்போர்ட் செய்தது, மகள் நிச்சயதார்த்த்த்துக்கு அழைப்பிதழ் அனுப்பாமல் அவமானப்படுத்தியது என்று ரஜினியின் மூவ் ஒவ்வொன்றும் தங்களுக்கு எதிராக இருப்பதாக விஜய் தரப்பு கருதுவாதால்தான் தொழில் ரீதியான அதிரடி மோதல் போக்கை ரஜினி விவகாரத்தில் கடைபிடிப்பது என்று முடிவு செய்திருக்கிறார்களாம்.
அப்படியானால் சுறாவை எப்போது ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்? அதிலும் விவகாரம்தான். ஏப்ரல் 14-ஆம் தேதி சித்திரை திருநாள் அன்று அதிரடியாக ரிலீஸ் செய்கிறது சன் பிக்ஸர்ஸ். அதே தேதியில் சூரியாவின் சிங்கம் படத்தை ரிலிஸ் செய்ய திட்டமிட்ட தயாரிப்பாளர் இப்போது சுறாவுடன் சிங்கத்தை மோத விடுவதா...வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறாராம். திரைக்கதையை விட பரபரப்ப்பா இருக்குப்பா கோடாம்பாக்க உள்குத்து அரசியல்!
Comments
Post a Comment