Vindhya appears in family court for her divorce case

http://thatstamil.oneindia.in/img/2010/03/11-vindhya200.jpg 

நடிகை விந்தியா 2008ம் ஆண்டு நடிகை பானுபிரியாவின் தம்பி கோபியை காதலித்து பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தார். கேரளாவில் இவர்கள் திருமணம் நடந்தது. ஆனால் ஒரு ஆண்டுக்குப் பிறகு அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

விந்தியாவிடம் இருந்து விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் கணவர் கோபி. ஆனால் விந்தியாவோ கணவருடன் சேர்ந்து வாழவே விரும்புவதாகக் கூறி மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி ராமலிங்கம் முன்பு நடந்தது. அப்போது விந்தியா, கோபி இருவருமே கோர்ட்டில் ஆஜராயினர்.

வழக்கை அடுத்த மாதம் 19ம் தேதிக்கு வழக்கு தள்ளி வைப்பதாக அறிவித்தார் நீதிபதி.

Comments

Most Recent