'Want to act with Rajini' - Sameera



"அசல்' படத்துக்காக ஸ்லிம் ஆனாராம் சமீரா ரெட்டி. ""வாரணம் ஆயிரம் தமிழில் எனக்கு பெரிய ஓப்பனிங்காக அமைந்தது. இப்போது அசல் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. பிரான்ஸில் நடந்த அசல் படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. சினிமாவைப் பொறுத்தவரை அஜித்திடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். எளிமை, தன்னடக்கம் என அவரின் பாதைகள் தனித்துவம் பெற்றதாக இருக்கிறது. அஜித்துடன் நடிக்க எப்போதும் ஆவலாக இருக்கிறேன். அடுத்து பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் மோகன்லால் ஜோடியாக நடிக்கிறேன். ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷப்படுவேன்'' என்கிறார் சமீரா ரெட்டி.

Comments

Most Recent