‘தம்பிக்கோட்டை’ படத்தில் பெண் தாதாவாக நடிக்கிறார் சங்கீதா இது பற்றி அவர் கூறியதாவது: ‘தம்பிக்கோட்டை‘ படத்தில் பெண் தாதாவாக நடிக்கிறேன். ...
‘தம்பிக்கோட்டை’ படத்தில் பெண் தாதாவாக நடிக்கிறார் சங்கீதா இது பற்றி அவர் கூறியதாவது: ‘தம்பிக்கோட்டை‘ படத்தில் பெண் தாதாவாக நடிக்கிறேன். கெஸ்ட்ரோல் மாதிரிதான். ஆனால் நான் வருகிற 15 நிமிடமும் தியேட்டரே அதிரும். அந்த அளவுக்கு நடித்திருக்கிறேன். பீடாவை போட்டுக்கொண்டு அந்த போதையிலேயே ஆண்களை உதைப்பேன்.
இதில் நடிக்க முதலில் தயங்கினேன். நிஜ வாழ்க்கையில் அப்படிபட்ட சில பெண்கள் உள்ளனர். அவர்களை பற்றி பத்திரிகைகளில் வந்த செய்திகளை இயக்குனர் காட்டினார். அதன் பின் நடிக்க சம்மதித்தேன். 10 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஒவ்வொரு நாளும் 20 பீடா சாப்பிட்டேன். சில நாட்களில் நாக்கு வெந்து புண்ணாகிவிட்டது. படப்பிடிப்பு முடிந்த உடனேயே சிகிச்சை பெற்றேன். நல்ல வேளை பீடாவுக்கு அடிமையாகவில்லை. இவ்வாறு சங்கீதா கூறினார்.

Comments
Post a Comment