தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் ராம நாராயணன் எழுதி இயக்கும் படம் ‘குட்டி பிசாசு’. சங்கீதா, பேபி கீர்த்திகா, ராம்ஜி, ரம்யா கிருஷ்ணன் நடித்துள்...
விழாவில் ராம நாராயணன் பேசியதாவது: ஏழு ஆண்டுகளுக்கு பிறகு ‘குட்டிப்பிசாசு’ படத்தை இயக்குகிறேன். இது நான் இயக்கும் 120&வது படம். என் படங்களில் பெரிய நடிகர்கள் நடித்ததில்லை. கால்ஷீட் கேட்டு அவர்கள் முன் நிற்பதில்லை. அப்படி கேட்டு செல்லும்போது, ‘ராம நாராயணன் கால்ஷீட் கேட்கிறாரே’ என்று அவர்களுக்கு சங்கடம் ஏற்படும். அதனால் மிருகங்களை வைத்து படம் இயக்கினேன். அதற்கும் தணிக்கையில் தடை கொண்டு வந்தார்கள். இதனால் அஃறினை பொருளான காரை வைத்து இயக்கலாம் என்று ‘குட்டி பிசாசு’ இயக்கி உள்ளேன். கார் வைக்கவும் தடை வந்தால் சைக்கிளை வைத்து இயக்குவேன். ஏவி.எம், கே.பாலசந்தர் போன்றவர்கள்தான் எனக்கு மானசீக ஹீரோ, குரு. இவர்களுக்கெல்லாம் மேல் என்னுடைய பெரிய கதாநாயகன் முதல்வர் கருணாநிதிதான். இவ்வாறு ராம நாராயணன் பேசினார். ஆர்.கே.செல்வமணி, ஈ.ராமதாஸ், லாரன்ஸ், ராம்ஜி, சங்கீதா உள்பட பலர் பங்கேற்றனர்.

Comments
Post a Comment