மம்பட்டியான் ரீமேக்கில் புதிய காட்சிகள்: பிரசாந்த்

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-919.jpg
தியாகராஜன் இயக்கும் படம் ‘மம்பட்டியான்’. தமிழ், தெலுங்கில் உருவாகும் இது, ‘மலையூர் மம்பட்டியான்’ படத்தின் ரீமேக். மம்பட்டியானாக நடிக்கும் பிரசாந்த், நிருபர்களிடம் கூறியதாவது: தெலுங்கில் கிருஷ்ணம்ராஜு, கன்னடத்தில் அம்பரீஷ், இந்தியில் ரஜினி நடிப்பில் ‘மலையூர் மம்பட்டியான்’ ரீமேக் ஆனது. இப்போது தமிழில் ரீமேக் ஆகிறது. தியாகராஜன் வேடத்தில் நான் நடிக்கிறேன். சரிதாவாக மீராஜாஸ்மின், சில்க் ஸ்மிதாவாக மல்லிகா ஷெராவத், கவுண்டமணியாக வடிவேலு உட்பட பலர் நடிக்கிறார்கள்.

இந்த கேரக்டருக்காக, பிரத்யேகமான உடற்பயிற்சி செய்து கெட்டப்பை மாற்றி நடிக்கிறேன். காட்டெருமை மற்றும் யானைகளுடன் நான் மோதும் சண்டைக்காட்சிகள் பிரமிப்பூட்டும். வடிவேலுவுடன் நடித்துள்ள காமெடி காட்சிகள், ‘வின்னர்’ படத்துக்குப் பிறகு ரசிகர்களிடையே பெரிய அளவில் பேசப்படும். ஷாஜிகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் யார் என்று ரசிகர்களுக்கு போட்டி நடத்தப்பட்டு, சரியான விடை எழுதுபவரை தேர்வு செய்து, ‘மம்பட்டியான்’ ஆடியோ வெளியீட்டு விழாவில், சம்பந்தப்பட்ட இசையமைப்பாளர் கையால் பரிசு வழங்கப்படும். பழைய படத்தின் கதை மற்றும் காட்சிகள் அப்படியே இருக்காது. இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப, மாற்றங்கள் செய்து படம் உருவாக்கப்படுகிறது. நவீன கிராபிக்ஸ் காட்சிகளும் இடம்பெறுகின்றன.

Comments

Most Recent