‘பசங்க’ படத்துக்குப் பிறகு பாண்டிராஜ், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் ‘வம்சம்’. இதை, மோகனா மூவிஸ் சார்பில் மு.க.தமிழரசு தயாரி...
‘பசங்க’ படத்துக்குப் பிறகு பாண்டிராஜ், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் ‘வம்சம்’. இதை, மோகனா மூவிஸ் சார்பில் மு.க.தமிழரசு தயாரிக்கிறார். அவரது மகனும் முதல்வர் கருணாநிதியின் பேரனுமான அருள்நிதி ஹீரோவாக நடிக்கிறார். சுனைனா ஹீரோயின். மற்றும் கஞ்சா கருப்பு, ஜெயபிரகாஷ், ராஜ்குமார், அனுபமா உட்பட பலர் நடிக்கின்றனர். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் உதவியாளர் தாஜ்நூர் இசை அமைக்கிறார். வாலி, நா.முத்துக்குமார் பாடல்கள் எழுதுகின்றனர். ‘‘ஒரு வம்சத்துக்குள் நடக்கும் சந்தோஷம், துக்கம், பகை, காதல் போன்றவற்றை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை அருகே உள்ள கிராமங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படம் ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்’’ என்றார் பாண்டிராஜ்.
Comments
Post a Comment