சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் பையா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்த வருடத்தின் இரண்டாவது சூப்பர்ஹிட் என்ற பெருமையும் இதற்கு கிடைத்துள்ளது. ...
சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் பையா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்த வருடத்தின் இரண்டாவது சூப்பர்ஹிட் என்ற பெருமையும் இதற்கு கிடைத்துள்ளது.
5. பயம் அறியான்
கிஷோர் நடித்திருக்கும் இந்த ஆக்சன் படம், மற்றப் படங்களின் விளம்பர வெளிச்சத்தில் அமுங்கிப் போயுள்ளது. முதல் மூன்று தினங்களில் இதன் சென்னை வசூல் 3.14 லட்சங்கள்.
4. விண்ணைத்தாண்டி வருவாயா
எட்டு வாரங்கள் கழிந்த நிலையிலும் பாக்ஸ் ஆஃபிஸ் டாப் 5ல் கௌதமின் படம் இடம் பிடித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி மூன்று நாள் வசூல் 4.5 லட்சங்கள். இதுவரை மொத்த வசூல் 5.57 கோடிகள்.
3. அங்காடித் தெரு
படத்துக் கிடைத்த பாராட்டுடன் ஒப்பிடுகையில் வசூல் குறைவுதான். நான்கு வார முடிவில் சென்னையில் இப்படம் 1.48 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 13.8 லட்சங்கள்.
2. ரெட்டச்சுழி
தாமிராவின் இந்த நகைச்சுவை படத்துக்கு இருவிதமான விமர்சனங்கள். சுமார் என்று சிலர், ஒருமுறை பார்க்கலாம் என்று வேறு சிலர். சரி, கலெக்சன்? ஷங்கர் தயாரிப்புக்கு மிக மிக குறைவுதான். முதல் மூன்று தினங்களில் 14.8 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது.
1. பையா
தொடர்ந்து முதலிடத்தில் பையா. மூன்று வாரங்கள் முடிவில் இப்படம் சென்னையில் மட்டும் 4.22 கோடிகளை வசூலித்துள்ளது. சென்ற வார இறுதி வசூல் 43 லட்சங்கள்.
வரும் வெள்ளிக்கிழமை சுறா வெளியாகிறது. வேறு வழியே இல்லை, பையா தனது முதலிடத்தை விட்டுத்தர வேண்டியதுதான்.

Comments
Post a Comment