சென்டிமெண்ட் காரணமாக தமன்னாவுக்கு முத்தமிட மறுத்துள்ளார் ஒரு ஹீரோ... இங்கல்ல... அக்கட பூமியில்! அப்படி என்னய்யா இருக்கு தமன்னாவிடம்? க...
சென்டிமெண்ட் காரணமாக தமன்னாவுக்கு முத்தமிட மறுத்துள்ளார் ஒரு ஹீரோ... இங்கல்ல... அக்கட பூமியில்!
அப்படி என்னய்யா இருக்கு தமன்னாவிடம்? கோடம்பாக்க புள்ளிகள் ஒருவருக்கொருவர் அலட்சியமாகக் கேட்டுக் கொண்டாலும், திரைமறைவில் தங்கள் படங்களில் தமன்னா நடித்தால் நன்றாக இருக்குமே என்று ஆசையோடு கிரீன் பார்க் ஹோட்டல் வாசலில் தவம் கிடைக்கிறார்கள்.
தமிழில் அவர் நடித்த படங்கள் தொடர்ந்து வணிக ரீதியில் பேசப்படுகின்றன. இவர் நடிக்கிறார் என்றால் முன்னணி விநியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள் (மொத்த உரிமையை வாங்கி விற்பவர்கள்!) நல்ல விலை கொடுக்கக் காத்திருக்கிறார்கள்.
தமன்னாவுடன் நெருக்கமான காட்சிகள் வேண்டும் என்று எழுதப்படாத நிபந்தனையே வைக்கிறார்களாம் சில ஹீரோக்கள் தங்கள் இயக்குநர்களுக்கு. இந்த நிலையில் தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருகிறார் தமன்னா.
அதில் ஒன்றுதான் பத்ரிநாத். இந்தப் படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன்.
இப்படத்தில் அல்லு அர்ஜூன் - தமன்னா இடையே உதட்டோடு உதடு வைத்து முத்தமிடும் காட்சியொன்றை படமாக்க இயக்குனர் விநாயக் விரும்பினார். தெலுங்கு படங்களில் முத்த காட்சிகள் கட்டாயம் இடம்பெற வேண்டிய சமாச்சாரம் என்பதால், தமன்னாவும் முத்தத்துக்கு தயாரானார். ஆனால் அவரை முத்தமிட அல்லு அர்ஜூன் மறுத்து விட்டார். இயக்குநர் எவ்வளவோ வற்புறுத்தியும் கேட்கவில்லை.
என்ன காரணமாம்...
அல்லு அர்ஜுன் படங்களில் சமீப காலமாக முத்தக் காட்சிகள் ஓவர்டோஸாகி விட்டதாம். இதனால் படங்கள் தொடர்ந்து தோல்வி கண்டு வருகின்றனவாம். குடும்பத்துடன் படம் பார்க்க ரசிகர்களும் வருவதில்லையாம். எனவே சென்டிமெண்டாக முத்தக் காட்சிகள் வேண்டாம் என்று நினைத்தாராம் அர்ஜூன். அதனால்தான் தமன்னா தயாராக இருந்தும் முத்தத்துக்கு நோ சொன்னாராம்!
Comments
Post a Comment